pithamசொத்தைப் பல்லின் பள்ளத்தை அடைக்க பாதரசம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களின் கலவையை பயன்படுத்துவது வழக்கம். செயற்கை பிளாஸ்ட்டிக் பொருளாகிய ‘பிஸ் ஜி எம் ஏ' வை வைத்து நிரப்புவதும் சகஜம். செயற்கைப் பொருள் உறுதியாக இருந்தாலும் வெடித்து கீறல் விடுவதுண்டு. பாதரசம் உடம்புக்கு விஷம் என்பதால் அதையும் ஜாக்கிரதையாகவே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில் சீன-கனடா நாட்டு அறிஞர் சூ என்பவர் மனித உடலிலிருந்தே மிகவும் கடினமான ஆபத்தற்ற பொருளை தயாரித்திருக்கிறார். கல்லீரலில் சுரக்கும் பித்தநீரில் உள்ள பித்தப் பொருளைப் பயன்படுத்தி இவர் தயாரித்துள்ள ரெசின் மற்றெல்லா சிமென்ட்டுகளைக் காட்டிலும் உறுதியாகவும் ஆபத்தற்றதாகவும் இருக்கிறது. இது சோதனை அளவில் இப்போது இருக்கிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It