பல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதன் அறிகுறிகளும்.

வயது முதிர்ந்து வருதல்
கட்டுப்பாடின்றி விருந்துண்ணல்
நீரிழிவு
பாரம்பரியமாக வருவது
ஆணாக இருப்பது
இனப் பண்பு
வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தல்
அவ்வப்போது ஏற்படும் நோய்கள்
மன அழுத்தம்
சத்துணவுக் குறைபாடுகள்
புகையிலையைப் பயன்படுத்துதல்-புகை பிடித்தல்
வறிய பொருளாதாரச் சூழ்நிலை
எலும்பு மெலிவுறுதல்
எச்.அய்.வி. கிருமிகள் தொற்றிக் கொள்வது
பல்வகை நோய்க் கிருமிகள் இருப்பது

இத்தகைய வாய் நோய்கள் உண்டாகவும் வேகமாகப் பரவவும் பல காரணங்கள் உள்ளன. வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை பெரும்பாலான மக்கள் அலட்சியப்படுத்துவதே இந்நோய் தீவிரமாவதற்கான பல காரணங்களை உருவாக்குகிறது. இந்நோய் பரவால் தடுக்க தேவையானதெல்லாம் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதில் அடிக்கடி கவனம் காட்டுதுதான்.

வாய் நோய்களுக்கான காரணங்கள்:

பல் ப்ளேக் நோய்
பற்காரை
அதிக உணவால் இரைப்பை அடைப்பு
விழுந்துபோன பற்களுக்கு மாற்றுப் பற்களைப் பொருத்தாமல் இருத்தல்
பல்வரிசை ஒழுங்கின்மை
வாய் மூலம் மூச்சு விடுதல்
அழிவு தரும் புகையிலை போன்ற பழக்க வழக்கங்கள்
பல்துலக்கும் பிரஷ்ஷினால் ஏற்படும் காயம்
சரியாகப் பொருத்தப்படாத செயற்கைப் பல்
ரேடியக் கதிர்வீச்சு

உலகில் உள்ள மொத்தம் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கை கொண்ட நுண்ணுயிரிகள் ஒருவரது வாயில் உள்ளன எனக் கூறப்படுகிறது. மற்ற உறுப்புகளில் நோய் தொற்றிக் கொள்ள இதுவே காரணமாகவும் அமையலாம்.

வாய்நோய்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

பல மக்கள் அதிக அளவு பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும், வியக்கத்தக்கப்படி அவர்கள் வாய்நோய்கள் அற்றவர்களாக உள்ளனர். வாய்நோய்களை உருவாக்கும் தீமை பயக்கும் நுண்ணுயிரிகள் இல்லாமையையும், இனப் பெருக்க நோய்கள் இல்லாமையையும் இதன் காரணங்களாகக் கூறலாம். வாயில் பற்களைச் சுற்றியுள்ள திசுக்கள் உருவாகும் போதும், உருவான பின்னும், நுண்ணுயிர்களும், நுண்ணுயிர் தயாரிப்புகளும், உயிரிகளும் பெரும் அளவில் அவர்மீது படையெடுக்கின்றன. வாய் நோய்கள் முற்றும்போது, இவைகளும் எண்ணிக்கையில் பெருகி விடுவதால் வாய்த்தசைகள் இவற்றைத் தங்களிடமே வைத்துக் கொள்ள இயலாமல் போய் விடுகிறது. பின்னர் அவை ஒரு சில நோய்களால் பாதிக்கப்படும் போது, இந்நுண்ணுயிரிகள் ஓர் ஒழுங்கு முறையில் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்த பாதிப்புகளின் சுழற்சி தொடங்கி விடுகிறது. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் நுண்ணுயிரித் தயாரிப்புகளில் ஒன்று இரத்தவட்டுத் திரட்சிக்குக் காரணமான பாப் எனப்படும் புரதமாகும்.

வாய்நோய்களும் நீரிழிவும்

நீரிழிவு நோய்க்கும் வாய் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நீரிழிவு நோயின் முக்கியமான சிக்கலுக்கு வாய்நோய்கள் காரணம் என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயுள்ளவர்கள் நீண்டகாலமாக இருக்கும், கடுமையான, வேகமாகப் பரவும் வாய் நோய்களுக்கு உள்ளாகின்றனர்; நீரிழிவு நோயற்றவர்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்படுவதில்லை. நீரிழிவு நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களை விட கட்டுப்பாடற்ற நோயாளிகள் அதிக அளவு வாய் நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

நீரிழிவு நோய் கடுமையான வாய் நோய்கள் ஏற்படவும், வேகமாகப் பரவவும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. வாய்நோய்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்ததும் நீரிழிவு நோயின் கடுமை குறைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வாய் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அவர்களது இன்சுலின் தேவை குறைந்து போகிறது. கடுமையான வாய் நோய்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது.

குறைப் பிரசவக் குழந்தைகளும், வாய்நோய்களும்

வாய்நோய்கள் உள்ள கருத்தரித்துள்ள பெண்களுக்கும், குறைந்த எடை கொண்ட குறைப் பிரசவக் குழந்தைகளுக்கும் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்பு உள்ளது என்பது சமீபத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தையின் எடை, குழந்தையின் வளர்ச்சி, தான் நுழைந்த உலகின் சூழ்நிலையில் குழந்தைத் தன்னைப் பொருத்திக் கொள்வதிலும் உள்ளிட்ட அம்சங்களை நோயை உருவாக்கும் இந்த நுண்ணுயிரிகள் உண்மையிலேயே பாதிக்க இயன்றைவையாகும். ஆசியாவில் 100 பிரசவங்களில் 15-ம், இந்தியாவில் 100 பிரசவங்களில் 33- குறைப்பிரசவங்களாக உள்ளன. இவ்வாறு ஏற்படும் என்று சந்தேகிக்க இயலாத வழக்குகளிலும் 25 சதவிகிதம் இது நிகழ்கிறது. என்றாலும், கடுமையான வாய்நோய்ககள் உள்ள பெண்களில் இத்தகைய குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் 75 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இதற்காக தாய்க்கு ஏற்பட்டுள்ள நோய்களைக் கண்டறிந்து பிரசவம் எவ்வாறு இருக்கும் எனத் தெரிவிக்கும் கருவிகள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

வாய்நோய்கள் பெரும் தீங்கு விளைவிக்காதது போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன் உடலின் மற்ற உறுப்புகளைத் தீவிரமாகப் பாதிக்க இயன்ற அதன் உள்ளுறை ஆற்றல்களும் சேர்ந்து இதற்கு அமைதியான கொலையாளி என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. மற்ற பெரும் நோய்களைப் போன்று, இந்த வாய்நோய்களுக்கு சிகிச்சை பெற அதிக அளவு மருந்துகளோ, அதிகப் பணச் செலவோ தேவையில்லை என்பது நற்செய்தியே. அதற்குத் தேவையானதெல்லாம் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும், சிறு வயது முதற்கொண்டே நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும்தான்.

வாய்நோய், பல்நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான குறிப்புகள்:

ஒரு நல்ல பல்மருத்துவரிடம் ஆலோசனை பெறுக. 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் செல்லவும்; தினமும் இரு முறை பல் துலக்கவும்; உணவு உண்டபின் வாயை நன்கு கொப்பளிக்கவும்; பல் விலக்குதல் மேலானது. உங்களது பற்களை நீங்கள் சுத்தம் செய்யும்போது, உங்களது இரத்தக் குழாய்களை நீங்கள் சுத்தம் செய்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

உங்களது நாக்கை அடிக்கடி சுத்தம் செய்யவும்; பற்களில் சிக்கிக்கொள்ளும் உணவைத் தவிர்த்துவிட்டு, நார்ச் சத்துணவை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்; நொறுக்குத் தீனியைத் தவிர்க்கவும்; வெற்றிலைப்பாக்கு, புகையிலை, குட்கா, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்; இரத்தம் கசியும் தாய்மைப் பேறு பெற எண்ணும் மகளிர் கருத்தரிக்கும் முன் வாய் நோய்கள் பற்றிப் பரிசோதித்துக் கொள்வதுடன், கருவுற்ற காலம் முழுமையிலும் வாயை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Pin It