இருதய நோய்களுக்கு தினப்படி எடுத்துக் கெள்ளும் ‘ஆஸ்பிரின்’ மாத்திரைகளால் வயதான காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐரோப்பாவின் புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு ‘ஆப்தால்மாலஜி’(Opthalmology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

ஆஸ்பிரின் மாத்திரைகளால் நேரடியாக கண்பார்வை பாதிப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வ றிக்கையில் கூறப்படவில்லை. ஆனால் கண் கோளாறுகள் ஏற்கனவே இருக்கும்பட்சத்தில் ஆஸ்பிரின் அதனை துரிதப்படுத்தி பார்வையில் கோளாறுகளை அதிகப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வயதானவர்களுக்கு ஏற்கனவே கண் பரிதி வட்டத்தில் உள்ள கரும்புள்ளியில் பழுது இருந்தால் அவர்களை ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வது உகந்ததல்ல என்று வில்லியம் கிறிஸன் என்ற பாஸ்டன் மருத்துவர் ஒருவர் இந்த ஆய்வு குறித்து கூறினார். 

ஹாலந்து நரம்பு விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த டார்கர் பௌலஸ் தலைமையிலான குழு 65 வயதுக்கு மேற்பட்ட 4,700 பேரை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர். ஆஸ்பிரின் மாத்திரைகளை தினப்படி எடுத்துக்கொள்ளும் 839 பேர்களில் 36 பேருக்கு ‘மேக்யூலர் டிஜெனெரேஷன்’ (Macular Degeneration) என்ற கண் பரிதிவட்ட கரும்புள்ளி பழுதடைந்திருப்பது தெரியவந்தது. 

இது பரிதி வட்ட கரும்புள்ளியில் ஈரம் அதிகரித்திருக்கும், பரிதி வட்ட கரும்புள்ளியில் வறண்ட தன்மையும் உள்ளது. இது மிகவும் சகஜ மானது, கடுமை குறைவானது. ஆனால் கண்ணின் காட்சிப்புல மையத்தில் ஈரமயமாவது ரத்த நாளத்தில் கசிவு ஏற்படுவதால் நிகழ்வது. 

இன்றைய தேதியில் அமெரிக்காவில் வறண்ட மற்றும் ஈரமய கண் மேக்யுலாவினால் 60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு பார்வை யிழப்பு அதிகம் இருப்பதற்கு காரணம் ஆஸ்பிரினாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It