விலை கொடுத்து வாங்காத பொருட் களில்தான் விலை மதிக்க முடியாத வாழ்க்கையின் அழகு மறைந்து இருக்கிறது. உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அழகுக்கும் ஒரு இடம் கொடுங்கள். அழகு ஒரு தேவதை போன்றவள். பல இடங்களில் நம் உடலில் அவள் மறைந்திருப்பாள். அத்தகைய அழகை ரசிக்காமல் வாழ்க்கையில் வெறும் இலாப, நஷ்டங்களைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பது பயனற்ற வீண் வாழ்க்கை. தலை அழகு, முடி அழகு, முக அழகு இப்படி எத்தனை எத்தனை அழகான அம்சங்கள் ஆண், பெண் இருவரிடத்திலும் கொட்டிக் கிடக்கிறது. 

இப்படிப் பட்ட அழகில் குறை நேரும் போது இயல்பாகவே மனிதர்கள் வருந்துகிறார்கள். அது நியாயமான வருத்தம் தானே. ஆரோக்கியமான தோல், அழகை மட்டும் தருவதோடு இல்லாமல் உடலில் உள்ளிருப்பதை வெளிக்காட்டும் கண்ணாடி யாகவும் இருக்கிறது. தோல் நோய்கள், நோயின் பல்வேறு அறிகுறிகள் பல வியாதிகளில் பொது வாக தோலில் ஏற்படக்கூடிய அரிப்பாலும் தோலின் நிறமாற்றத்தாலும் தான் கண்டுபிடிக்கப் படுகின்றன. இதனைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கிறோம். நம் உடலின் ஆரோக்கியமும் தோலில் தெரியும். 

மயிர்ப்புழு வெட்டு 

தோலிலே பல நோய்கள் போன்ற பரம்பரை யும், சத்துக்குறைவும் தொற்று மற்றும் நுண்ணுயிரி களால் ஏற்படும் நோய்களும், ஒவ்வாமையும், பால்வினை நோய்களும் காரண மாகலாம். உடல்நலமும் தோல் நலமும் பிரிக்க முடியாததும் அவசியமானதும்கூட. தலைமுடி உதிர்தல் இன்று அனைத்து வயதினருக்கும் ஆண் பெண் பாகுபாடின்றி இருக்கும் தலையாயப் பிரச்சினை. முடி உதிர்தல் ஒரு பூஞ்சையால் தலையில் ஏற்படும் தொற்றாகும். இது காளான் நோய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. 

பூஞ்சைகள் தாவரங்களைப் போன்ற பச்சையம் இல்லாததால் அவை விலங்குகள், செடிகள், மனிதர்கள் போன்றவற்றில் தொற்றி வாழ்கின்றன. வெப்ப நாடுகளில் இந்த பூஞ்சை நோய்கள் அதிக அளவில் மனிதர்களைத் தாக்குகின்றன. வியர்வையும், சீதோஷ்ண நிலையும் ஏதுவாக இருப்பதால் இந்தத் தொற்றுகள் இங்கு பெருமளவில் தங்கி நோயை உண்டாக்குகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகமாதலால் பூஞ்சை நோய்கள் அதிக அளவில் நிறைய பேரைத் தாக்குகின்றன. அதுமட்டுமல் லாமல் திரும்பத் திரும்ப பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் தருகின்றன. தலையில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை மயிர்ப்புழு வெட்டு என்கிறோம். 

இந்நோய் பரவ ஆரம்பித்தவுடன் தலையில் முடி திட்டுத்திட்டாக உதிரும். அந்த இடங்கள் பார்ப்பதற்கு மினுமினுப்பாகவும், வழுக்கை யாகவும் இருக்கும். சிலருக்கு வட்ட வடிவிலோ, நாணயம் போன்றோ ஆரம்பித்து எல்லா முடியுமே வலுவிழந்து உதிர்ந்து தலை முழுவதுமே வழுக்கை யாகி விடுவதும் உண்டு. சிலருக்கு தலையில் ஆங்காங்கே இந்த மயிர்ப்புழு வெட்டு பாதிப்பு இருக்கும். தலையில் படரும் பூஞ்சை நோயில் பல வகையில் உள்ளன. இவை எளிதிலும் விரைவாகவும் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு தொற்றும். 

சிலருக்கு தலையில் சொட்டை விழும் 

சிலருக்கு மயிர்க்கால்களில் சீழ் கொப்புளங் கள் இருக்கும். சில குறிப்பிட்ட இடத்தில் சிவந்து வீங்கி இருக்கும். அதில் முடிகள் காணப்படாது. இது வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடமிருந்தும் மனிதருக்குத் தொற்று கிறது. 

சிலருக்கு தலையில் பக்கு, பக்கான பத்தையான கட்டிகள் ஏற்பட்டு துர்நாற்றம் அடிக்கும். இது எளிதில் ஒருவரிடமிருந்து அடுத்த வருக்கு பரவுகிறது. இதனால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சொட்டை தலையில் உண்டாகலாம். 

சிலருக்கு மயிர்க்கால்களில் கருப்பு நிற புள்ளிகள் போல் இருக்கும். தலையில் ஆங்காங்கே சொட்டையும் இருக்கும்.

தலையில் ஒரு இடத்தில் மட்டும் முடி உதிர்ந்து சொட்டையாக இருப்பதினை Alopecia என்றும் முழுவதும் உதிர்ந்து தலை சொட்டையாவதனை Alopecia Totalis என்றும் சொல்கிறார்கள். 

மனஉளைச்சலும், டென்ஷனும் பரபரப்பும் இப்போதைய கால கட்டத்தில் அதிகமாக இருப்பதாலும் முடி உதிரலாம். அதிகம் சிந்திப்பவர்களுக்கு தலை வழுக்கையாகும் என்றும் நாம் விளையாட்டாக சொன்னாலும், இன்றைய ஆராய்ச்சிகள் அதிலுள்ள உண்மையை நிறையவே நிரூபித்திருக்கின்றன். 

தலைகாட்ட முடியவில்லையே!? 

பொதுவாக தலைமுடி உதிர்கிறது என்றாலே அனைவருக்கும் இனம் புரியாத பயம் தொற்றிக் கொள்கிறது. எப்படி இதனை சரி செய்வது. மேற்கொண்டு உதிராமல் தடுப்பது, என்ன மருத்துவம் செய்வது என்று மூளையைக் குழப்பும் அளவிற்கு மனம் வேதனைப்படுகிறது. பருவ வயதில் இதனால் ஏற்படும் வெட்கமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. சிலர் இதனால் கதறி அழுவதையேகூட நீங்கள் பார்த்திருக்கலாம். திருமணத்திற்கு தேதி குறித்த பிறகு, தலைமுடி உதிர்ந்து சில இடங்களில் சொட்டையானால் என்ன ஆகுமோ, என்ற கவலை பல பேர் மனதையும் ஆட்டி படைக்கிறது. பலர் இதை வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மன இறுக்கத்திற்கு ஆளாவார்கள். 

இளைஞர்களுக்கு முன் நெற்றியிலேயே முடிகொட்ட ஆரம்பித்து விடுகிறது. ஹார்மோன்களின் (Testosterone) பிரச்சினை காரணமாக இளநரையும், முடி கொட்டுதலும், முன் நெற்றி வழுக்கையும் ஏற்படலாம். மரபணுக்களின் ஆதிக்கமும் இதில் அதிகம். சிலருக்கு டைஃபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை, நாள்பட்ட நோய்கள் போன்ற தொந்தரவிற்குப் பிறகும் முடி கொட்டி வழுக்கை ஏற்படலாம். இளநரையும் தோன்றலாம். முடியின் அடர்த்தியும், தன்மையும் இதனால் மாறுபடலாம். முகம் ஒருவருக்கொருவர் மாறுவது போலத்தான் முடி மாறுவதும். 

ஆங்கில மருந்துகள், நரைத்திருப்பதற்கு Hair dye-ம் சில இரசாயனப் பொருட்களும் பயன்படுத்து கிறார்கள். இதனால் புற்றுநோய் வர வாய்ப்புள் ளது. மினாக்ஸிடில் (Minoxidil) ஃபால்டின் என்ற மருந்துகள் வழுக்கைத் தலையில் முடியை வளரக் கொடுக்கப் பட்டாலும் முடி வளர்வதில்லை. எண்ணெய்கள், சோப்புகள், க்ரீம்கள், வைட்ட மின், மினரல் மாத்திரைகள் மற்றும் பலவிதச் சத்து மாத்திரைகள் எதிர்பார்க்கும் பலனைத் தருவ தில்லை. Hair Transplantation மிகுந்த செலவாகும் ஒரு வைத்திய முறையாக இருக்கிறது. மருத்துவர் சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் இதுபோன்ற அழகுப் பிரச்சினைகளும் அடங்கும். 

பொடுகுத் தொல்லை, ஹார்மோன் காரணமா? 

இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பிறந்த குழந்தைக்குக் கூட பொடுகு இருக்கும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தாயிடமிருந்து பரவுகிறது. குழந்தை வளர வளர இது மறைந்து விடும். பதினைந்து வயதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரை பொடுகு வரலாம். இந்தியாவில் 10 பேரில் 5 அல்லது 6 பேருக்கு பொடுகு இருக்கிறது. 

பொடுகு உள்ளவரின் சீப்பைப் பயன்படுத்தி னால் பொடுகுத் துகள்கள் பிறரு டைய தலைகளுக்கும் பரவும். அப்படிப் பரவிய புதிய தலைகளில் அது வளர்வதற்கான சூழல், அதிக எண்ணெய்ச் சுரப்பு இருந்தால் பொடுகு வளரும். இல்லையென்றால் பொடுகு வருவ தில்லை. 

காரணங்கள்: 

இதற்கு மரபணுக்களே காரணம். உடற்கூறு களைப் பொறுத்து அது வருவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. தலையின் தோல் பகுதியில் உள்ள செல்கள் இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை வளர்சிதை மாற்றம் அடைகின்றன. இறந்து போன பழைய செல்கள், நாம் குளிக்கும்போது நீரில் கலந்து, கரைந்து வெளியேறிவிடும். இவை கண்களுக்குத் தெரிவதில்லை. தோலின் கீழ் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகளின் அதிகப் படியான எண்ணெய்ப் பசையில் செல்கள் ஒன்று திரண்டு கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு உருவாகும் துகள்களே பொடுகு எனப்படும். 

இந்தப் பொடுகுத் துகள்களின் நிழலில் பல்கிப்பெருகும் ஒரு வகை ஈஸ்ட் செல்கள்தான் தலையில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. 3:2 என்ற விகிதத்தில் பெண்களை விட ஆண்களுக்கே பொடுகு அதிகம் வருகிறது. 

அதிக எண்ணெய்ப் பசை சுரப்பதால் பொடுகு உண்டாகிறது என்பதால் கொழுப்புச் சத்து மிக்க உணவகள் இப்பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஹார்மோன் சுரப்புடன் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை என்பதுதான் உண்மை. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோ, தலைசீவுவதோ பொடுகுக்குக் காரணமாகாது. நாம் தலையில் தேய்க்கும் எண்ணெய்க்கும், தோலில் சுரக்கும் எண்ணெய்க்கும் எவ்விதத் தொடர்புமில்லை. தலை சீவுவதும், எண்ணெய்த் தேய்ப்பதும் தலையிலிருந்து பொடுகை அகற்ற உதவும். ஆனால் அழுந்த சீவக் கூடாது. அழுந்தினால் தலையில் அரிப்பு ஏற்பட்டு தொற்று உண்டாகிறது. 

உடல் நலக்கேடுகள் பொடுகால் அவ்வள வாக ஏற்படுவதில்லை. பாக்டீரியாத் தொற்று ஏற்படும். இதன்மூலம் கழுத்திலிருக்கும் சுரப்பிகள் பாதிக்கப்படலாம். மேலும் காய்ச்சலும் உடல் ஆரோக்கியக் குறைவுகளும் ஏற்படலாம். பொடு கினால் சிலருக்கு முடி உதிரலாம். ஆனால் பலருக்கு முடி உதிர்வது கிடையாது. 

இளநரையும், வழுக்கையும் 

காரணங்கள் : 

முடியின் நிறத்திற்குக் காரணம் மெலினின் என்னும் நிறமியாகும். மெலினின் குறைவால் நரை ஏற்படுகிறது. மேலும் முடியின் அடிவாரத்திலும், மயிர்க்கால்களிலும் காற்றுக் குமிழிகள் உண்டாகி விடுவதால் நடை உண்டாகிறது. பரம்பரைக் காரணங்களாலும், ரத்த நாளங்களின் தன்மை யாலும், தீவிரமான சோகையாலும், சிலவகை சத்துக்கள் குறைவதாலும் நரை உண்டாகலாம். வெயிலில் அதிகமாக நிற்பதாலும் சிலருக்கு நடை உண்டாகிறது. 

வழுக்கையும் நரையைப்போல் பரம்பரையாலேயே வருகிறது. குடும்ப ராசியின் காரணமாகவும், கவலை, பயம், மன இறுக்கம், தீவிர மனச்சோர்வு ஆகியவைகளாலும் முடி உதிர்கிறது. இரும்புச் சத்து, zinc, புரோட்டீன் ஆகிய சத்துக் குறைவாலும் சிலருக்கு வழுக்கை ஏற்படுகிறது. அதிகமாக வைட்டமின் ஏவை உட்கொண்டாலும் லித்தியம், பீட்டா தடை மாத்திரைகள் (Beta Blockers), கருத்தடை மருந்துகள், இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொண்டாலும் முடி கொட்டும். பிட்யூட்டரி குறைவு, தைராய்டு குறைவு, அட்ரினலின் குறைவு போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகி வழுக்கை ஏற்படலாம். அதிகமான மருந்துகள் அடங்கிய தைலங்களை தலைக்குத் தடவுவதாலும், அடிக்கடி அழுத்தமாகத் தலையைச் சீவுவதாலும், முடி உதிர்ந்து போகும். காளான் (பூஞ்சை) காரணமாகவும் திட்டு திட்டாக முடி உதிரும். நல்ல நீரில் குளிப்பதாலும், சத்தான காய்கறி, பழங்களை உட்கொள்வதாலும், சீரான உடற்பயிற்சி செய்வதாலும் ஓரளவிற்கு நரையை யும் வழுக்கையையும் குறைக்கலாம். 

ஹோமியோபதியில் பொதுவாக தலைமுடி உதிர்தலுக்கு வேறு நோய்களோ, குறிப்பிட்ட பெரிய காரணங்களோ இல்லாத பட்சத்தில் Phosphorus 30, Mezereum 200, vinca Minor200 ஆகிய மூன்று ஹோமியோபதி மருந்துகள் பயன்படும். 

ஹோமியோபதி மருந்துகளை உணவு சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் சப்பி சாப்பிடவேண்டும். இந்த மருந்துகள் முடி உதிர்வதனை தடுக்கும். முடி வளரவும் உதவும். இளநரைக்கும், வழுக்கை தொந்தரவுக்கும் Lycopodium 200, Sulphur 200 ஆகிய மருந்துகள் பயன்படும். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும், வேறு மருத்துவ முறைகளில் மருந்துகளை சாப்பிடுபவர்களாக இருந்தாலும், இம்மருந்துகளை சாப்பிடலாம். இம்மருந்துகள் பக்க விளைவுகளையோ, பின் விளைவுகளையோ

உண்டாக்காதவை. இம்மருந்துகளுக்கு பத்தியங்கள் இல்லை. நோய்க்கும் நோயாளிக்குமான அனைத்து மருத்துவ முறைகளிலும் இருக்கும் பத்தியங்கள் இம்மருத்துவ முறைக்கும் பொருந்தும். 

ஹோமியோபதியில் ஏராளமான மருந்துகள் உள்ளன. Lycopodium, phosphorus, Badiaga, kail sulph, sulphuric Acid போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி முறைப்படி சாப்பிட்டால் தலையாய பிரச்சினையான தலைப்பிரச்சினை தீரும்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It