அயோடின்...மனித வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை சத்து. தைராய்டு ஹார்மோன்களின் முக்கிய பகுதிப் பொருளே அயோடின். மனித உடல், மூளையின் இயள்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் துணையாகிறது. அயோடின் குறைந்தாலும், அதிகரித்தாலும் தொல்லைதான். மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலிருந்து நமக்குத் தேவையான அயோடின் கிடைத்தாலும் மண்ணில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக உப்பின் மூலம் அயோடின் உட்கொள்ள வேண்டும்.

எத்தனையோ உணவுப் பொருட்கள் இருக்க, சாதாரண உப்புக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? உலகில் உள்ள அனைத்து மக்களும் தினமும் உணவில் உப்பை சேர்த்து உண்ணுகின்றனர். அதுவும் குறைந்தது 10 கிராம் என்ற அளவிலேயே இருப்பதால் உப்பு சிறந்த ஊடகமாக கருதப்படுகிறது. அயோடின் குறைபாட்டால் பெரியவர்களுக்கு வேலைத்திறன் குறைதல் மற்றும் ஆற்றல் குறைதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளின் சராசரி அறிவுத் திறன் மதிப்பீடு குறைகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவுகள் அயோடின் சத்துள்ள கூட்டுபொருள் கலந்து தயாரிப்பதே அயோடின் சத்துள்ள கூட்டுப்பொருள் கலந்து தயாரிப்பதே அயோடைஸ்ட் உப்பு. இதன் தோற்றம், மணம், சுவை அனைத்தும் சாதாரண உப்பைப் போலவே இருக்கும். சமையலின் போதும், நேரடியாக உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்.

அயோடின் உப்பை காற்றில் திறந்து வைத்தால் அயோடின் அளவு குறைந்துவிடும். காற்றுப்புகாத டப்பாவில் உப்பை அடைத்து வைக்கலாம். தூள் உப்பு தவிர கல் உப்பிலும் அயோடின் சேர்க்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவில் அதிகபட்சமாக 3 முதல் 6 மடங்கு அயோடின் உப்பு சேர்த்தாலும், சிறு நீர் வடிவில் வெளியேறி விடுகிறது. அயோடின் உப்பை சாப்பிடுவதால் அலர்ஜியோ, ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. அயோடின் குறைபாடு இல்லாதவர்களும் அயோடின் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இனி மேல் உப்பு சப்பில்லாத மேட்டருக்கெல்லாம் உப்பை இழுக்காதீங்க.

Pin It