ஆசனவாய் சிரைக் குழாய்கள் உப்பிப் பெருப்பதுதான் ‘மூலம்’ எனப்படுகிறது. சாதாரணமாக நம் உடம்பிலுள்ள எல்லா சிரைக் குழாய்களிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்திற்கு செலுத்துகின்றன. இரத்தம் சிரைக்குழாய்களில் அநாவசியமாகத் தேங்கி நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நமது வயிற்றிலிருந்து ஆசன வாய்க்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையப் பெறவில்லை. இதனால் ஆசனவாய் சிரைக் குழாய்களில் சிறிது அழுத்தம் அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, ஆசன வாயில் சிறிய பலூன் மாதிரி உப்பிவிடுகிறது.
அடிக்கடி மலச்சிக்கல் உண்டானால் ‘மூலம்’ வரும். சிறுநீர்த்தாரை அடைப்பு, பிராஸ்டேட் வீக்கம், கொழுத்த உடல் போன்றவற்றால் ‘மூலம்’ உண்டாகும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் கழலைகள் காரணமாகவும் மூலம் வரும். கர்ப்பிணிகளுக்கு கருப்பையில் வளரும் குழந்தை மலக்குடலை அழுத்துவதால், மூலம் தற்காலிகமாக உண்டாகும். சிலருக்கு பரம்பரை அம்சத்தினால் ஆசனவாய்ச் சிரைக்குழாய் சுவர்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலம் வரலாம்.
.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆளுநர் இரவியை மட்டுமன்று ஆளுநர் அமைப்பையே விரட்டியாக வேண்டும்!
- திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு
- தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!
- ‘ஆன்மீகத்தில்’ பதுங்குகிறது பார்ப்பனியம்
- ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்
- மக்களே! பார்ப்பனீயம் ஜாக்கிரதை!!
- பெரியார் முழக்கம் மே 19, 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- பேரறிவாளன் விடுதலை
- தொழிலாளர் தோழர் அம்பேத்கர்
- வாக்குப் பதிவு எந்திரம் பற்றி சங்கிகளும் நண்பர்களும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது மருத்துவம்