ஆனைமலை ஒன்றியம் காகபுதூரில் கடந்த மே 2 ஆம் நாளன்று மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. தீச்சட்டி எடுப்பதும் தீமிதித்துக் காட்டுவதும் இந்துக்களின் மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிற நிகழ்வுகளென்றும் இதனால் இந்து இயக்கங்கள் இதற்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடுவார்களென்றும் அப்போது சட்டம் ஒழுங்கு கெடும் என்றும் ராமகோபாலனின் குரலில் பேசி அனுமதி மறுத்தார் ஆனைமலைக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாடசாமி.

பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தடுத்து இந்துத்துவ குரலாய் ஒலித்த தமிழக அரசின் காவல்துறையைக் கண்டித்துமே ௬ ஆம் நாள் காகபுதூரில் கண்டனக் கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது. பல்வேறு அலைக்கழிப்புகள், நிபந்தனைகளுக்குப்பின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்குள் ஏராளமான காவலர்களைப் போட்டு பரபரப் பாக்கியது. மேலும் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர்களோ அல்லாமல் உள்ளூர் அளவில் தோழர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு சுருக்கெழுத்தர்கள், ஒலி, ஒளிப்பதிவுகள்என ஏகத்திற்கு அலட்டிக் கொண்டது காவல்துறை.
கண்டன உரையாற்றிய தோழர்கள் இரா. மோகன், சி. விசயராகவன், வே. வெள்ளிங்கிரி, கா.சு.நாகராசன், கோவை நாகராசு, மு. சம்பத் ஆகிய அனைவருமே காவல்துறை இந்துத்துவமயமாகிவிட்டதை சுட்டிக் காட்டினர்.
காகபுதூர் கிராமத்தைப் பொறுத்தவரை மக்களின் அனைத்துத் தேவை களுக்காகவும் உடனடியாக களம் இறங்கிப் போராடுகிற ஒரே இயக்கமாக, ஒட்டு மொத்த மக்களின் ஆதரவைப் பெற்ற அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் விளங்குகிறது. கோவில் நிர்வாகிகளே கழகக் கூட்டங்களுக்கு நிதியளித்து ஆதரவு தருகிற அந்த கிராமத்தில் காவல்துறை தேவையற்ற வார்த்தைகளால் பிளவு உண்டாக்க முயன்றது. மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு தடை விதித்த காவல்துறையைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தின் மொத்த செலவையும் பொது மக்களே ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சியிலும் பெருந்திரளாய் பங்கேற்று இறுதி வரை இருந்து உரைகளைக் கேட்டனர்.
பகுத்தறிவுப் பிரச்சாரங்களைத் தடுக்கும் காவல்துறை காவல் நிலையங்களில் இந்துமதப் பண்டிகையான ஆயுத பூஜை நடத்தும்போது காவல்நிலையங்களை முற்றுகையிடுவோம் என்று கூட்டத்தில் பேசிய தோழர் காசு. நாகராசன் எச்சரித் தார். நிகழ்ச்சிக்கு பழ. மாரிமுத்து தலைமை தாங்கினார். த. மணி நன்றி கூறினார்.
- பெரியார் முழக்கம் செய்தியாளர்

ஆனைமலை ஒன்றியம் காகபுதூரில் கடந்த மே 2 ஆம் நாளன்று மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. தீச்சட்டி எடுப்பதும் தீமிதித்துக் காட்டுவதும் இந்துக்களின் மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிற நிகழ்வுகளென்றும் இதனால் இந்து இயக்கங்கள் இதற்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடுவார்களென்றும் அப்போது சட்டம் ஒழுங்கு கெடும் என்றும் ராமகோபாலனின் குரலில் பேசி அனுமதி மறுத்தார் ஆனைமலைக் காவல் துணைக் கண்காணப்பாளர் மாடசாமி. 

பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தடுத்து இந்துத்துவ குரலாய் ஒலித்த தமிழக அரசின் காவல்துறையைக் கண்டித்துமே ௬ ஆம் நாள் காகபுதூரில் கண்டனக் கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது. பல்வேறு அலைக்கழிப்புகள், நிபந்தனைகளுக்குப்பின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்குள் ஏராளமான காவலர்களைப் போட்டு பரபரப் பாக்கியது. மேலும் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர்களோ அல்லாமல் உள்ளூர் அளவில் தோழர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு சுருக்கெழுத்தர்கள், ஒலி, ஒளிப்பதிவுகள்என ஏகத்திற்கு அலட்டிக் கொண்டது காவல்துறை. 

கண்டன உரையாற்றிய தோழர்கள் இரா. மோகன், சி. விசயராகவன், வே. வெள்ளிங்கிரி, கா.சு.நாகராசன், கோவை நாகராசு, மு. சம்பத் ஆகிய அனைவருமே காவல்துறை இந்துத்துவமயமாகிவிட்டதை சுட்டிக் காட்டினர். காகபுதூர் கிராமத்தைப் பொறுத்தவரை மக்களின் அனைத்துத் தேவை களுக்காகவும் உடனடியாக களம் இறங்கிப் போராடுகிற ஒரே இயக்கமாக, ஒட்டு மொத்த மக்களின் ஆதரவைப் பெற்ற அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் விளங்குகிறது. கோவில் நிர்வாகிகளே கழகக் கூட்டங்களுக்கு நிதியளித்து ஆதரவு தருகிற அந்த கிராமத்தில் காவல்துறை தேவையற்ற வார்த்தைகளால் பிளவு உண்டாக்க முயன்றது.

மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு தடை விதித்த காவல்துறையைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தின் மொத்த செலவையும் பொது மக்களே ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சியிலும் பெருந்திரளாய் பங்கேற்று இறுதி வரை இருந்து உரைகளைக் கேட்டனர். பகுத்தறிவுப் பிரச்சாரங்களைத் தடுக்கும் காவல்துறை காவல் நிலையங்களில் இந்துமதப் பண்டிகையான ஆயுத பூஜை நடத்தும்போது காவல்நிலையங்களை முற்றுகையிடுவோம் என்று கூட்டத்தில் பேசிய தோழர் காசு. நாகராசன் எச்சரித் தார். நிகழ்ச்சிக்கு பழ. மாரிமுத்து தலைமை தாங்கினார். த. மணி நன்றி கூறினார்.

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

 

Pin It