கீற்றில் தேட...

அண்மைப் படைப்புகள்

periyamuz-logo


1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. இதனால் டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.

2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி / ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 காசுகளுக்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்ட விரோதமானது.

3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுர மீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது.

4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரை வார்க்கப்பட்டது. பல்கலை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தும் அது புறந்தள்ளப்பட்டது. இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.

5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம். ஆனால், ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங்களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையா நாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது. வெங்கையா நாயுடு மோடியை ஏன் ஆதரிக்கிறார் என்பது புரிகிறதா?

6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுர மீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.

7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஓட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.

8. 38 மிகப் பெரிய ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.

9. ஹாசிரா எனும் இடத்தில் எல் அண்டு டி நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மீட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1 அதாவது சதுர அடி வெறும் 10 காசுக்கு தாரை வார்க்கப்பட்டது.

10. ஏiசெயவே குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

11. கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48க்கு கால்நடை தீவனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் வெளிச்சந்தையில் இத் தீவனம் ரூ.24க்கு கிடைக்கிறது.

12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன் காரணமாக இழப்பு ரூ.92 கோடி.

13. ழுளுஞஊ எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ.4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ.290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

14. ளுரதயடயஅ ளுரகயடயஅ லுடிதயயே எனும் திட்டத்திற்கு 2003 ஆம் ஆண்டு ரூ.6237.33 கோடி ஒதுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு இதனை ஆய்வு செய்த பொழுது ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பா.ஜ.க. உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலி காப்டரையோ பயன்படுத்துவது இல்லை. ஏர்-இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை. மிகவும் சொகுசான தனியார் முதலாளி களுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக் கொள்வர்.

அண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதே போன்று தனி விமானத்தில்தான் வந்தார். அக்டோபர் 18 அன்று சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.

16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.

17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49 சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறுவனத்திற்கு விற்கப் பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.

Pin It


பார்ப்பனியம் - மதத்தின் பெயரால் கட்டமைத்த சமூக உளவியல்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெண்ணடிமைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கச் சொல்கிறது. மேலை நாடுகளில் பெண்கள் மீதான குற்றங்கள் மீதான பார்வையிலிருந்து இது வேறுபடும் புள்ளியாக இருப்பதை ஆழமாக பதிவு செய்கிறது, இக்கட்டுரை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது.

இன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால் அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கவே அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இப்படியான காரணங்களை எந்த நாட்டிலும் கேட்க முடியாது.

கயர்லாஞ்சியில் சுனிதா வன்புணர்வு செய்யப் பட்டது குடிபோதையிலோ அல்லது நொடிநேர வெறியிலோ அல்ல. அது ஒரு பெருங்கூட்டத்தால், ஊரின் பொது வெளியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டம். அந்த வெறியை ஊட்டியது ஜாதி. ஆதிக்க ஜாதி ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட, ஆதிக்க ஜாதிப் பெண்கள் சுற்றி நின்று தூண்டிவிட நடத்தப்பட்ட அந்த குற்றச் செயலை செய்வதற்கான துணிவை அவர்களுக்கு அளித்தது இந்த சமூகத்தின் ஜாதிய கட்டமைப்பும் அதை காத்து நிற்கும் அரசமைப்பும். இப்படியான ஒன்றையும் நீங்கள் வேறு எந்த நாட்டிலும் கேட்கவோ பார்க்கவோ முடியாது.

வாசாத்தியிலும், அந்தியூரிலும், சத்தியமங்கலம் காடுகளிலும் கேட்ட பெண்களின் ஓலம், அதிகாரத்தின் அடக்குமுறை வன்முறையாலேதான். அதிகார அத்துமீறல்களும், சீருடை ரவுடிகளின் பாலியல் வன்கொடுமைகளும்கூட பிற நாடுகளில் நடக்கக்கூடும். ஆனால், இங்கு நிகழ்ந்தவற்றில் பாதிக்கப்பட்டப் பெண்கள் அனைவரும் பழங்குடியின, ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பது தற்செயலானது அல்ல. மணிப்பூரிலும், பிற வட கிழக்கு மாநிலங்களிலும்கூட அதிகாரத்தின் கொடிய கரங்கள் நெறிப்பது பழங்குடியினப் பெண்களையே.

இங்கு மட்டும்தான் குற்றவாளியைவிட பாதிக்கப் பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஊட்டப்படுகிறது. தான் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை வெளியேச் சொல்வது தனக்குத்தான் அவமானம் என்ற சிந்தனை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆழ விதைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வேளை துணிந்து அப்பெண் வெளியே சொன்னால், சமூகம் அவளை விலக்கி வைக்கிறது. வசை பாடுகிறது. குற்றத்தை அவள் மீதே சுமத்துகிறது.

“தன்னை வன்புணர்வு செய்ய வந்தவர்களிடம் அப்பெண் அண்ணா என்று கெஞ்சியிருந்தால் அவள் தப்பித்திருக்கலாம்” - அசராம் பாபு, சாமியார்.

“இருபாலர் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட வேண்டும்., பெண்கள் சரியான முறையில் உடை அணிய வேண்டும்.” - ஜமாத்-ஈ-இஸ்லாம்-ஹிந்த் தலைவர்.

“பாரதத்தைவிட இந்தியாவில்தான் அதிக வன்புணர்வுகள் நடக்கின்றன” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

“ஜாதகம் சரியில்லாததால்தான் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்” - சட்டிஷ்கர் உள்துறை அமைச்சர்.

மேலே உள்ளவை தனி மனிதர்களின் கருத்துகள் அல்ல. இச்சமூகத்தின் எண்ணவோட்டம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த எண்ணவோட்டத் திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த எண்ணவோட்டத்திலிருந்து அவர்கள் விலகாதவாறு இந்த சமூகமும் அதன் அங்கமாய் இருக்கிற ஊடகங் களும் மிக கவனமாக பார்த்துக்b காள்கின்றன.

1980களில் ‘புதிய பாதை’ என்றொரு படம் வெளியாகி சக்கை போடு போட்டது. அது அந்த இயக்குநரின் முதல் படமாக இருந்த போதும் பெரும் வெற்றி வாய்ப்பை பெற்றது. அதிலும் அதற்கான விளம்பரங்களில் “பெண்கள் கூட்டம் கூட்டமாக காண வரும் படம்” என்று பெருமையுடன் போட் டனர். அந்த படத்தின் கதை இதுதான். “ஒரு ரவுடி, ஒரு பெண்ணை அவளது திருமணத்திற்கு முதல் நாள் வன்புணர்வு செய்கிறான். இந்த செய்தியை அறிந்த மணமகன், இதை ஒரு விபத்தாக எடுத்துக் கொள்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறான். ஆனால், அப்பெண் அதை மறுத்து அந்த ரவுடியை தேடிச் சென்று அவனையே திருமணம் செய்து, அவனை திருத்தி அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.”

இக்கதை எண்பதுகளில் வந்ததுதானே என்பவர்களுக்கு..... 2004இல் வந்த படம் ‘தென்றல்’. அக்கதையின் நாயகி, தன்னைவிட வயதில் மிகவும் மூத்த ஒரு எழுத்தாளனை அவனுக்குத் தெரியா மலேயே விரும்புவாள். ஒரு கட்டத்தில், அவளை ஒரு பாலியல் தொழிலாளி என்று நினைத்து அந்த எழுத்தாளன் அவளிடம் உடலுறவு வைத்துக் கொள்வான். நாயகி அதை தனக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதி, அவன் மூலம் உண்டான குழந்தையை பெற்று, வளர்த்து, அவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போவாள்.” இரண்டு படத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

வன்புணர்வு பற்றிய திரைப்படங்களின் சித்தரிப்பு மூன்றே விதம்தான். ஒன்று வன்புணர்வுக்கான முயற்சியின் இறுதிக் கட்டத்தில் நாயகன் வந்து காப்பாற்றி விடுவான். (ஆனால் நெடுநேரம் நடக்கும் அந்த முயற்சியின் அந்த இறுதிக் கட்டம் வருவதற்கு முன் காமிராவால் அப்பெண்ணை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வன்கொடுமை செய்து விடுவார்கள்) இரண்டாவது, வன்புணர்வு ஒருவேளை நடந்துவிட்டால், அப்பெண் இறந்து போவாள். நாயகன் பழிவாங்குவான். அல்லது திருந்துவன். மூன்றாவதுதான் மிக சிறப்பானது. வன்புணர்வு செய்தவனையே அப்பெண் ‘வெற்றிகரமாக’ மணம் முடிப்பாள்.

இந்த மூன்றாவது சித்தரிப்புக்குப் பொருள் வெகு எளிமையானது. ஒருவன் உங்களை அடித்து அவமானப்படுத்தி விட்டால், “ஒரு முதலாளிக்கு தான் அடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது. அவன் உன்னை அடித்து விட்டதால் இனி அவன்தான் உன் முதலாளி. அவனிடம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இரு” என்பதுதான்.

இப்படியான சித்தரிப்பும் வேறு எந்த நாட்டிலும் காண கிடைக்காத அற்புதம்.

இந்த சித்தரிப்புக்கு பண்பாடு என்று பெயராம். இருக்கட்டும். பண்பாடு என்றால் யாருடைய பண்பாடு? எதன் பண்பாடு? என்ற கேள்வி எழுகிறது.

ண்பாட்டை காப்பதற்காகவே வன்புணர்வு செய்ததாக தில்லி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் எதிலிருந்து வருகிறது?
மநு சாஸ்திரம் அத்தியாயம் - 9

14. மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களை புணரு கிறார்கள்.

15. மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பன்மையும் இயற்கையாக வுடையவர்கள்.

16. மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே உண்டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்கான மேலான முயற்சி செய்ய வேண்டியது.

17. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு கற்பித்தார்.

19. மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆக, கெட்டுப் போகும் தன்மையுள்ள பெண்களை காப்பதற்கான பெரும் பொறுப்பை ஏற்றே அவர்கள் மணமாகாமல் ஒரு ஆணுடன் இரவு நேரத்தில் தனியே சென்ற பெண்ணிற்கு தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனையின் மூலம் அவர்கள் சொல்ல நினைத்த செய்தி நேரடியானது. இனி பெண்கள் இரவில் வெளியே செல்லாதீர்கள். அதிலும் தந்தை, கணவர், சகோதரர், மகன் அல்லாத யாருடனும் செல்லாதீர்கள். அதிலும் மணமாகாத பெண்கள் செல்லவே செல்லாதீர்கள். சென்றால் இந்த கதிதான் உங்களுக்கும். இதுதான் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தி. அந்த செய்தி, ஊடகங்கள் மூலமாக மிக நன்றாகவே மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. சாதாரணமாகவே பெண்கள் தனியே பயணிப்பதை அச்சத்துடன் தவிர்க்கும் சமூகம், இதற்கு பின் அச்சம் அதிகமாகிப் போய் நிற்கிறது.

பொருளாதார அடிப்படையிலும், கல்வியிலும் முன்னேறிய போட்மாங்கே குடும்பத்தின் பெண்களை வன்புணர்வு செய்த ஆதிக்கசாதியினர் விடுத்த செய்தி, “தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களாகவே இருக்க வேண்டும். முனனேற முயன்றால் இந்த கதிதான்” என்பதே.
பல ஆண்டுகாலம், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் மிகவும் போராடி சில அடிகள் முன் நகர்த்திய சமூகத்தை, ஒரே வன்முறையில் பல அடிகள் பின்னோக்கி நகர்த்துவதில் ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இன்று ஜாதியை முன் வைத்து காதல் திருமணங் களுக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை ஆதிக்க ஜாதி அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. இதுவும் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறையே. ஒரு பெண் எந்த ஜாதியை சேர்ந்த வளாக இருந்தாலும், தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவளிடமிருந்து பறிப்பதாகவே இவர்களின் முன்னெடுப்புகள் உள்ளன. பெண்களின் அந்த உரிமையை மிகவும் மலினப்படுத்தி, ஜீன்ஸ் பேண்டுக்கும், கூலிங் கிளாசுக்கும் மயங்கி போகிறார்கள் என்பது ஆணாதிக்கத்தின் உச்சம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையின் வளத்தை காட்டும் அடையாளங்களாக சொத்தும், நகைகளும் இருப்பது போலவே அவன் குடும்பத்து பெண்களும் அவனது ‘கவுரவத்தின்’ அடையாளமாகவே உணரப் பட்டுள்ளது. பெண்ணும் ஒரு உடைமை. அதனால் அவளது வாழ்வின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை அவளது குடும்பத்தின் ஆணுக்கே உள்ளது. அதை மீறி அவள் முடிவெடுத்தால், அது கொடுங்குற்றம். இந்த மனநிலையிலிருந்தே காதல் திருமணங்கள் எதிர்க்கப்படுகின்றன. ஜாதி வெறியும் ஆணாதிக்கமும் இணைந்து நின்று பெண்களின் உரிமைகளை பறிப்பதில் முனைப்பே காட்டுகின்றன. அதற்கு அடிப்படையாக இந்து மத இந்திய உளவியல் உள்ளது. இந்து மத உளவியலிருந்து விடுபடாமல் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளுக்கு முடிவு ஏற்படாது.

Pin It

2013 செப்டம்பர் 18 அன்று திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம்.

அதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்:

1. 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் - அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

2. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயந்திர ரவி, அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. மாறாக வன்முறை நிகழ்வுகள் மிக வேகமாகப் பெருகுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

3. குஜராத் மாநிலம் முழுவதும் விஸ்வ இந்து பரிசத்தின் சதித் திட்டங்களுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட அனுமதிக்கப்பட்டன. மோடி மேற்கொண்ட முதல் தொலைபேசி கட்டளையே அமைதி திரும்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுதான். மாறாக மோடி, குஜராத்தின் விஎச்பி செயலாளரான டாக்டர் ஜெய்தீப் பட்டேலுக்கு போன் செய்து அவரைக் கோத்ராவிற்கு செல்லுமாறு பணித்திருக்கிறார். இவ்வாறு மோடிக்கும் விஸ்வ இந்து பரிசத்துக்கும் இடையிலான சதித் திட்டம் ரகசியமாகத் திட்டமிடப்பட்டு மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மேற்கொள்ளப்பட்டது.

4. விஸ்வ இந்து பரிசத் பந்த் நடத்திடவும், வீதிகளிலும் பொது இடங்களிலும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட அனுமதித்ததும் மிகவும் மோசமானவைகளாகும். 2002 பிப்ரவரி 27 அன்று மதியமே மாநிலப் புலனாய்வுப் பிரிவினருக்கும், காவல் துறையினருக்கும் பந்த் அழைப்புக் குறித்து நன்கு தெரியும். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து காவல்துறை நிர்வாகம் வீதிகளில் இருந்த சாமானிய மக்கi ளஅப்புறப்படுத்தி, கலகக் கும்பல் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் கடைகளின் மீது மட்டும் வன்முறை வெறியாட்டங்களை நடத்த வசதி செய்து கொடுக்கப்பட்டன.

5. கோத்ரா இரயில் நிலையத்தில் தீக்கிரைக்கு ஆளான சடலங்களை மக்கள் மனதில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி.யினர் பார்ப்பதற்கும், அவற்றின் புகைப்படங்கள், ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படவும் அனுமதிக்கப்பட்டன. இவற்றை சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.

6. கோத்ராவில் இறந்தவர்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆர்.எஸ்.எஸ்./வி.எச்.பி. ஆட்களுக்கு மோடி தலைமையிலான அரசாங்கம் மற்றும் நிர்வாகம் போதிய அவகாசம் அளித்தது.

7. கோத்ரா ரயிலில் இறந்தவர்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் வி.எச்.பி. செயலாளர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரால் அகமதா பாத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சவ ஊர்வலம் நடத்திட அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 27 அன்று மாலை மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சவ ஊர்வலத்தை மோடி துவக்கி வைக்கிறார். இக்கூட்டத்தில் ஜெய்தீப் பட்டேலும் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுகிறார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக வன்முறை வெறியாட்டங்கள் பெருகுவதற்கு மோடி பிரதானமாகப் பொறுப்பாவார்.

8. “இந்துக்கள் தங்கள் கோபத்தைக் வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று உயர் காவல்துறையினருக்கும் நிர்வாகத்தினருக்கும் மோடி அறிவுறுத்தி இருக் கிறார். இரு மூத்த அதிகாரிகளும், கேபினட் அமைச்சர் ஹரேன் பாண்டியாவும் இவை தொடர்பாக சாட்சியம் அளித்திருக்கின்றனர். மாநிலப் புலனாய்வுப் பிரிவில் பணியற்றிய சஞ்சீவ் பட் என்னும் அதிகாரியும் இது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்பும் சாட்சியம் அளித்திருக்கிறார்.

9. அகமதாபாத்தில் வேண்டுமென்றே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜெய்தீப் பட்டேல் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஊர்வலத்தினர் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் தாக்கினார்கள். பின்னர் அகமதாபாத் வீதிகள் வழியே ஊர்வலமாகச் சென்றனர். நரோடா பாட்டியா, நரோடா காம் மற்றும் குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்களைப் பட்டப் பகலில் பலர் கண்முன்னாலேயே வல்லுறவு செய்திடவும் அனுமதிக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 28 அன்று இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறவும், ஆத்திரமூட்டும் வகையில் சவ ஊர்வலங்கள் நடைபெறவும் மோடி, காவல்துறை மற்றும் நிர்வாகத்தினரால் வேண்டுமென்றே அனுமதிக்கப்பட்டது.

10. இராணுவம் வரவழைக்கப்பட்ட போதிலும், அவை செயல்பட அனுமதிக்கப் படவில்லை.

11. குஜராத் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் காவல்துறை யினர் உதவியுடனேயே வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைகளில் அமர்ந்து கொண்டு இவற்றிற்கு உத்தரவிட்டனர். மோடி உள்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்குத் தலைமை வகித்தார்.

12. 2002 மே மாதம் வரை வன்முறைகள் தொடர மோடி அனுமதித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிசத் ஆகியவை இவ்வன்முறை களுக்குப் பின்னே இருக்கின்றன என்பதனை ஏராளமான கடிதப் போக்குவரத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.

13. உச்சநீதிமன்றம் உறுதியாகத் தலையிடும் வரை கீழமை நீதிமன்றங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பெயரளவிலேயே நடவடிக்கைகள் இருந்தன. வழக்குகளை விசாரிப்பதற்காக அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ ந்து பரிசத் ஆதரவாளர்களேயாவர். இதன் காரணமாகவே பெஸ்ட் பேக்கரி விசாரணை மற்றும் பில்கீஸ் பானு வழக்கு மாநிலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.

14. 2002 பிப்ரவரி 27 அன்று மோடியே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சை மேற்கொண்டார். முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட அவரது உள்துறையே அனுமதித்தது. காவல்துறைத் தலைவர் (புலனாய்வு) ஆர்.பி.ஸ்ரீகுமார் தலைமையிலிருந்த மாநிலப் புலனாய்வுப் பிரிவு விஸ்வ இந்து பரிசத் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால் இது அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. பவநகர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் சர்மாவும் இதேபோன்று வெறுப்பைக் கக்கிய சந்தேஷ் என்னும் நாளிதழ் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாக அந்த செய்தித் தாளுக்கு வாழ்த்துச் செய்தியை மோடி அனுப்பி இருந்தார். நேர்மையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மோடியால் தண்டிக்கப்பட்டனர்.

15. குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்ட பின், வன்முறை தொடர்பாக நடைபெற்ற காவல்துறை ஆவணங்கள் அனைத்தையும் மோடி அழித்துவிட்டார். அதற்காகவும் அவர் விசாரிக் கப்பட வேண்டியவராவார்.

இக்குற்றச்சாட்டுகளின்மீது பெருநகர் நீதித்துறை நடுவரின் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி போடப்பட்டிருக்கிறது.

Pin It


அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலுக்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதியை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக ‘அவுட் லுக்’ பத்திரிகை யில் அருந்ததிராய் விரிவாக பேட்டி அளித் துள்ளார். அரசியல், பொருளாதாரம், ஊடகங் களில் பனியாக்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை புள்ளி விவரங் களுடன் சுட்டிக்காட்டிய அருந்ததிராய் அரசியல் கட்சிகள் ஜாதியமைப்பு ஜாதி பிரச்சினைகள் குறித்து ‘கண்டு கொள்ளாத’ போக்கை மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மண்டல்’ பரிந்துரை அமுலாக்கத்துக்குப் பிறகு சமகால இந்திய அரசியலில் ஜாதி ஒரு அடிப்படை அம்சமாக மாறியிருக்கிறதே என்ற வாதத்துக்கு அருந்ததிராய் பதிலளித் துள்ளார். இந்தியாவில் சமகாலத்தில் அதிகாரம், ஊடகம், பொருளாதாரங் களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவினரையும் உரிமைகள் மறுக்கப் பட்டோரையும் பார்க்க மறுக்கிறார்கள்.

மண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, ஜாதி அரசியலுக்குள் வந்துவிட வில்லை. அதற்கு முன்பே ஜாதி என்ற என்ஜின்தான் ‘இந்து’ சமூகத்தை மட்டுமல்ல, இந்திய சமூகத்தையே இழுத்துக் கொண்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் மன்னராட்சிகள் முடிவுக்கு வந்து ‘தேசங்கள்’ உருவான போதும் சரி, அதற்குப் பிறகு ‘அரசாங்கம்’, ‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற அமைப்புகள், கருத்துகள் வந்த போதும் சரி, எந்தெந்த சமூகப் பிரிவினர், எவ்வளவு எண்ணிக்கை யில் இருக்கின்றனர் என்பதே முக்கிய பிரச் சினையாக இருந்து வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளை ஆதிக்க ஜாதிகள் அடக்கி வந்துள்ளனர். அதன் காரணமாக இஸ்லாமியர்களாகவும், அதற்குப் பிறகு, சீக்கியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மாறத் தொடங் கினர். பிறகு ‘இந்து’க்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறதே என்ற கவலையில் தான் இந்து “சீர்திருத்த வாதிகளாக” புறப்பட்ட சிலர், மதமாற்றங்களைத் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

மதம் மாறிய “தீண்டப்படாத”வர்களை யும் ஆதிவாசிகளையும் அவர்களுக்கான “தூய்மைச் சடங்குகளை” நடத்தி மீண்டும் இந்து மதத்துக்கு மாற்ற “ஆரிய சமாஜ்”, “சுத்தி” இயக்கத்தைத் தொடங்கியது. அதே வேலையை இப்போதும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. ஆக, இந்திய அரசியலில் அடிப்படையாகவே ஜாதி தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனாலும்கூட ஜாதி ‘கண்டு கொள்ளப் படாத’ மய்ய அளவில் விவாதத்துக்குக் கொண்டு வரப் படாததை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. நமது நாட்டில் ‘அறிவு ஜீவிகளுக்கு’ குறிப்பாக இடதுசாதி ‘அறிவு ஜீவிகளுக்கு’ ஜாதி அமைப்பை விவாதிப்பது கசப்பாகவே இருக்கிறது. ஆய்வுக் கட்டுரை களில் அடிக்குறிப்புகளாக பயன்படுத்து வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அவர் களுக்கு விருப்பமில்லாத, சங்கடத்துக் களாக்குவதாகவே ஜாதியப் பிரச்சினை இருப்பதோடு, மார்க்சியம் கூறும் ‘வர்க்க’ விவாதங்களுக்கு ஜாதி பற்றிய விவாதங்கள் அவர்களுக்கு தேவையற்றதாகி விடுகிறது. “எங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை” என்று கூறுவதே சிறப்பாகவும் முற்போக்காகவும் கருதப்படுகிறது. இது தப்பித்துக் கொள்ளும் செயல்பாடுதான்.

ஜாதியை எதிர்த்துப் போராட வேண்டிய நியாயத்தைப் பேசாமல் ஒதுங்கிக் கொள்கிற போக்கு. நம்முடைய அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளிலும் இப்படி ஜாதியம் குறித்த பார்வை அழுத்தம் தரப்படாமல் ஒதுக்கப்படுகிறது. பிரபலமான எழுத் தாளர்களின் எழுத்துகளிலோ, திரைப்படங் களிலோ, ஜாதி குறித்து பேசப்படுகிறதா? நீதி குறித்தும் அடையாளம் குறித்தும் பேசுவோரும் எழுதுவோரும் ‘புதிய பொருளாதார’த்தை விமர்சிப்போரும் ஜாதி பற்றி எவ்வளவு பேர் பேசுகிறார்கள்? எழுது கிறார்கள்? புரட்சிகரமான தீவிரவாத அமைப்புகள் கூட ஜாதிப் பிரச்சினையை ஒதுக்கி வைத்து விட்டன. 2001இல் தென்னாப்பிரிக்காவில் டர்பனில் நடந்த இனவெறி எதிர்ப்பு மாநாட்டில் ஜாதியும் ஒரு இனவெறியாகக் கருதப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது இந்திய ஆட்சி, அதை ஏற்காமல் மறுத்தது எதைக் காட்டுகிறது?

அதேபோல் மக்கள் தொகைக் கணக் கெடுப்பிலும் இந்தியா ஜாதி குறித்த புள்ளி விவரங்களை கணக்கெடுக்க மறுத்து விட்டது. இதனால் ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் உரிமைகள், அடக்கு முறைகள் வெளியே தெரியாமல், இருட்டுக்குள்ளேயே நம்மை மூழ்கடித்து விட்டார்கள். அமெரிக்காவில் 1919இல் 165 கறுப்பின மக்கள் படுகொலை செய்யப் பட்டனர் என்றால், அதற்குப் பிறகு ஒரு நூற்றாண்டு காலம் கழித்து இந்தியாவில் 2012இல்8 1574 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

651 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இது அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம்.

ஜனார்த்தன், திரிவேதி போன்ற காங்கிரஸ்காரர்கள் இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் வழங்கக் கூடாது; பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜாதி அடிப்படை யிலான இடஒதுக்கீடு மிக மிக அவசிய மானது. இடஒதுக்கீடு இருப்பதால்தான் குறைந்த அளவிலாவது தலித் மக்கள் உயர் பதவிகளிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் வர முடிந்திருக்கிறது. பல கல்வி நிறுவனங்களில், நீதித்துறையில், முற்போக்கு கல்வி நிறுவனங்களாகக் கருதப் படும் ஜவகர்லால் நேரு பல்கலையில்கூட முறையான இடஒதுக்கீடுகள் இல்லை. தெரு கூட்டுதல், சாக்கடைக் குழிக்குள் இறங்குதல் போன்ற உயிருக்கு ஆபத்தான உடலைப் பாதிக்கக்கூடிய வேலைகளுக்குத்தான் தலித் மக்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு இருக்கிறது. இந்தத் துறைகளில்கூட தனியார் மயம் வந்த பிறகு, இந்த துப்புரவு வேலை களுக்கு குறைந்த கூலியில் ஒப்பந்த அடிப் படையில் வேலைக்கு எடுக்கப்படும் நிலைக்கு ‘தலித்’ மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்” என்று கூறியுள்ளார் அருந்ததி ராய்.

Pin It

1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த மறுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு பகுதி:

இந்தியாவில் இன்று சராசரி தனி மனித வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நூறு பணக்காரர்களின் சொத்துக்கு சமமாக இருக்கிறது. 1.2 பில்லியன் மக்கள் தொகைக் கொண்ட ஒரு தேசத்தில், நாள் வருவாய் ரூ.20க்கும் குறைவாகக் கொண்டு வாழ்வோர் 800 மில்லியன் மக்கள். பகாசுர கம்பெனிகள்தான் இந்த ஒரு நாட்டை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு நாட்டையே ஆட்சி செய்கிறார்கள். அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், பெரும் தொழில் நிறுவனங்களின் சேவகர்களாக மாறி வருகின்றனர்.

இந்த மாற்றங்களினால் ஜாதிய கட்டமைப்பு களுக்கிடையிலான உறவுகளில் தாக்கங்கள் நிகழ்ந்துள்ளதா? இந்திய சமுகம் உடைந்து சிதறிவிடாமல் ஜாதிய உறவுகளே தடுத்து வருகின்றன என்றும், தொழில் புரட்சிக்குப் பிறகு மேற்கத்திய சமூகத்தில் நிகழ்ந்ததைப்போன்ற பிளவுக் கூறுகள் தலைதூக்காமல் சமூகத்தைக் காப்பாற்றியதும் ஜாதி அமைப்புதான் என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.

இதற்கு நேர் எதிரான கருத்துகளை முன் வைப்போரும் உண்டு. இந்த பகாசுர தொழில் நிறு வனங்களின் வருகைக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகர் மயமாகும் போக்கு அதி கரித்து வருகிறது என்றும், அதனால் தொழிலாளர்கள் வேலை செய்யும் சூழல்கள் மாறிக் கொண்டு வருவதால் ஜாதியமைப்பின் இறுக்கம் தளர்ந்து, அதன் தேவைக்கான அவசியம் குறைந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். இரண்டு கருத்துகளும் ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை தான்.

பொதுமைப்படுத்தப்படும் கருத்துகள், உண்மை நிலவரங்கள் ஆக முடியாது. அண்மையில் அமெரிக் காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை உலகின் மிகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 55 பேர் இந்தியர்கள். இதில் தரப்பட்டுள்ள சொத்து விவரங்கள் - அவர்கள் வெளிப்படையாக அறிவித்தது மட்டும்தான். இந்த 55 இந்திய கோடீசு வரர்களில் முதல் 10 இடத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இந்த 10 நபர்களில் 7 பேர் ‘வைசியர்கள்’. இவர்கள் பெரும் தொழில் நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு உலகம் முழுதும் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். துறை முகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், கப்பல் கம்பெனிகள், மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல், எரிவாயு, அலைபேசி இணைப்புகள், சினிமா தயாரிப்பு, ‘ஸ்டெம்செல்’, சேமிப்பு கிடங்குகள், மின் விநியோக அமைப்புகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை நடத்தி வருகிறார்கள். யார் இவர்கள்? முகேஷ் அம்பானி (ரிலையன்சு), லட்சுமி மிட்டல், திலிப் சிங்காவி, ரூஜா சகோதரர்கள், கே.எம்.பிர்லா, சாவித்ரிதேவி ஜின்டால், கவுதம் அடானி, சுனில் மிட்டல் ஆகியோர். எஞ்சியுள்ள 45 உலக அளவிலான பணக்காரர்களில், மேலும் 19 பேர் வைசியர்கள். மற்றவர்களில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்சி, போராஸ், கத்ரிஸ் (அனைவரும் வணிக ஜாதிகள்) இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒரு ‘தலித்’தோ ஒரு ஆதிவாசியோ கிடையாது.

பெரிய தொழில்கள் மட்டுமல்ல, வைசியர்களான பனியாக்கள் சிறு தொழில்களிலும் ‘லேவாதேவி’ என்ற வட்டிக்கு கடன் வழங்குவதிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வறுமையில் உழலும் மக்கள் இவர்களின் சுரண்டல் பிடியில் சிக்குண்டு கிடக் கிறார்கள். பழங்குடி மக்கள் அதிகம் வாழக்கூடிய வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோராம், மேகலயா, நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலிருந்து ஆயுதம் தாங்கிய குழுக்களின் போராட்டங்களும், இராணுவ குவிப்பும், இரத்த ஆறுமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே இந்த மாநிலத்தில் குடியேறிய மார்வாடிகள் ஆரவாரம் இல்லாமல், தங்கள் தொழிலை நிலைப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இந்தப் பகுதிகளில் அனேகமாக அனைத்துப் பொருளாதார செயல்பாடு களையும் தங்களுடைய ஆளுகைக்குக் கீழே இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்தியாவில் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடைசியாக எடுக்கப்பட்டது 1931 ஆம் ஆண்டில்தான். அந்தக் கணக்கெடுப்பின்படி வைசியர்கள் (பனியா) 2.7 சதவிதம் (அதே நேரத்தில் தீண்டப்படாதவர்கள் 12.5 சதவீதம்) பனியாக்களின் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளமான வாழ்க்கைச் சூழல் இருந்தும்கூட, அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர, அதிகரித்ததாக தெரியவில்லை., ஆனால், பெரும் வர்த்தகங்கள், சிறு தொழில்கள், விவசாயம், பெரும் தொழில்களில் உயர்ந்து நிற்கிறார்கள். மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்த அளவில் உள்ள ஒரு பிரிவு பொருளாதாரத்தில் மட்டும் அசைக்க முடியாத சக்தியாக மேலும் மேலும் உயர்வது ஏன்? ஜாதியும் முதலாளித்துவமும் தனித்துவமான இந்திய சமூக ‘உலைக்களத்தில்’ பிரிக்க முடியாமல், பிணைந்து போய்கிடப்பதுதான் இதற்கான காரணம். திறமை, தகுதிகளைப் பார்க்காமல், தன்னுடைய ஜாதி என்பதற்காகவே கைகோர்த்து ஒருவருக்கொருவர் உயர்வதற்கும் உயர்த்துவதற்குமான ‘ஓர் சார்புத் தன்மை’ ஜாதியமைப்புக்குள்ளேயே அசைக்க முடியாமல் இறுகிப் போய் நிற்கிறது (Cronyism is built into the caste system).

வைசியர்கள் (பனியாக்கள்) என்ன செய்கிறார்கள்? அவர்கள் நம்பும் மதசாஸ்திரங்கள் அவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறார்கள். வட்டி வாங்கும் உரிமை வைசியர்களுக்கு உண்டு என்று “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது. மனு சாஸ்திரம் எந்தப் பிரிவினரிடமிருந்து எவ்வளவு வட்டி வாங்க வேண்டும் என்று மேலும் விரிவாகக் கூறுகிறது. “பிராமணர்”களிடமிருந்து 2 சதவீதமும், க்ஷத்தியர்க ளிடமிருந்து 3 சதவீதமும், ‘சூத்திரர்’களிடமிருந்து 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்பட வேண்டும் என்று ‘மனு சாஸ்திரம்’ வரையறுத்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு ஒரு “பிராமணன்” 24 சதவீதமும், ஒவ்வொரு சூத்திரர், பஞ்சமர் - 60 சதவீதமும் வரி செலுத்தியாக வேண்டும். இன்றைக்கும்கூட கந்து வட்டிக்காரர்கள், ஏழை விவசாயிக்கு அல்லது நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளிக்கு 60 சதவீத வட்டி வாங்குவது வழக்கமாக உள்ளது. ஒரு வேளை அவர்கள் பணமாக செலுத்த முடியாதபோது, “உடல் ரீதியாக வட்டி” வாங்கிவிடுகிறார்கள். அதாவது, தலைதலைமுறையாக இந்த மக்கள் கடன் கொடுத்த ‘முதலாளி’க்கு அடிமையாக உடல் உழைப்பைத் தந்து வருகிறார்கள். திருப்பி செலுத்த முடியாத கடனுக்காக வட்டி இப்படி உடல் உழைப்பாக சுரண்டப்படுகிறது. ‘மனுசாஸ்திர’ப்படி எந்த ஒரு மேல்ஜாதியினரையும் ‘கீழ் ஜாதியினருக்கு’ சேவை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

அர்த்தசாஸ்திரமும் மனு சாஸ்திரமும் வகுத்துள்ள வாழ்க்கை முறையினால் ‘வைசியர்கள்’ (பனியாக்கள்) தொழில் துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். “பூதேவர்கள்” என்று கூறிக் கொள்ளும், அதாவது வானத்திலிருந்து பூமியில் உள்ள அற்ப மனிதர்களுக்காக சேவை செய்வதற்காக கடவுளால் அனுப்பப்பட்டதாகக் கூறிக் கொள்ளும் “பிராமணர்கள்” என்ன செய்கிறார்கள்? 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு “பிராமணர்கள்” 6.4 சதவீதம் என்று கூறுகிறது. ஆனால், இந்த சதவீதம்கூட, வைசியர்களைப்போல குறைந்து வந்துள்ளது. சமூக வளர்ச்சி ஆய்வு மய்யம் (Centre for the Study of Developing Society - CSDS) நடத்திய கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத்தில் பார்ப்பனர் பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை கணிசமாகக் குறைந்த போதிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருப்பது எதைக் காட்டுகிறது? பார்ப் பனர்கள் செல்வாக்கும் அதிகாரமும் குறைந்த வரு கிறது என்ற கருத்தை இந்த உண்மைகள் மறுக்கின்றன.

அம்பேத்கர் புள்ளி விவரங்களுடன் விளக்குகிறார். 1928இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்கள் அரசு பதவிகளில் 37 சதவீத ‘கெசட்டட்’ அதிகாரிகள் பதவிகளிலும் 43 சதவீத ‘கெசட்டட்’ அல்லாத பதவிகளிலும் இருந்தனர். 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் கைவிடப்பட்டதால் உண்மை நிலை மறைக்கப் பட்டது. எனவே 1931 ஆம் ஆண்டு நிலை அப்படியே தொடர்ந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. மக்கள் தொகை விகிதாசாரத்தில் வகிக்கும் பதவிகள் பற்றிய பார்ப்பனர் புள்ளி விவரங்கள் ஏதும் கிடைத்திடாத நிலையில், இது தொடர்பாக வெளிவந்த தகவல்களை மட்டுமே நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு குஷ்வந்த் சிங் (பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர்) , ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் இவ்வாறு கூறியிருந்தார்:

“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப் பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக் கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணை செய லாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் “கூர்ந்த அறிவுத் திறன்” தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை” - என்று குஷ்வந்த் சிங் எழுதினார்.

குஷ்வந்த் சிங் தந்துள்ள இந்த புள்ளி விவரங்களில் பிழைகள் இருக்கலாம்; ஆனால், மிக மோசமான அளவில் பிழைகளாக இருக்க வாய்ப்பில்லை. அதற்குப் பிறகு கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. புதிய கணக்கெடுப்புகள் வந்தால் உண்மை நிலையைக் கண்டறிய முடியும். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூக வளர்ச்சி மய்யத்தின் (சி.எஸ்.டி.எஸ்.) கணக் கெடுப்பின்படி, 1950 முதல் 2000 வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 47 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். இதே காலகட்டத்தில் உயர்நீதிமன்றங்கள் கீழ் நீதிமன்றங்களில் இணை நீதிபதிகளாக இருந்த பார்ப்பனர்கள் 40 சதவீதம். 2007 ஆம் ஆண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை இந்தியாவில் உயர் அதிகாரிகளாக 37.17 சதவீதம் பார்ப்பனர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலோர் உயர் அதிகாரப் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர்.

ஊடகங்களிலும் காலங்காலமாக பார்ப்பனர் களே ஆதிக்கத்தில் இருந்து வருகிறார்கள். இதில்கூட, 1945இல் அம்பேத்கர் கூறிய கருத்துகளே காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “தீண்டப்படாதவர் களுக்கு பத்திரிகை இல்லை. காங்கிரஸ் நடத்தும் பத்திரிகைகள் தீண்டப்படாதவர்களை இருட்டடிக் கின்றன. அவர்கள் குறைந்த அளவில்கூட வெளிச்சத் துக்கு வந்துவிடக் கூடாது என்று உறுதியாக முடிவு செய்துவிட்டன. தீண்டப்படாதவர்கள் தங்களுக்காக பத்திரிகை நடத்த முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. விளம்பரங்கள் மூலம் வருவாய் இல்லாமல் எந்த ஒரு பத்திரிகையும் உயிர்வாழ முடியாது. விளம்பரங்கள், தொழில் வணிக நிறுவனங் களிடமிருந்து தான் கிடைக்கும். சிறிய தொழில் பெரிய தொழில் எதுவாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் காங்கிரசோடு இணைந்து நிற்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத எந்த அமைப்பையும் அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

இந்தியாவிலே பத்திரிகைகளுக்கு செய்தி தரும் மிகப் பெரிய செய்தி நிறுவனமான ‘அசோசி யேட்டட் பிரஸ்’சில் பணியாற்றுகிறவர்கள் அனை வருமே சென்னைப் பார்ப்பனர்கள். இந்தியாவில் வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளுமே இவர்களின் கைப்பிடிக்குள்தான் அடக்கம். இந்த செய்தி நிறுவனம் வழங்கும் செய்திகளையே வெளியிடுகின்றன. இந்தப் பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே தருவார்கள். காங்கிரசுக்கு எதிரான எந்த செய்தியும் விளம்பரமாகாமல் தடுத்து விடுவார்கள். தீண்டப் படாதவர்கள் சக்திக்கும் அப்பாற்பட்ட நிலை இது” என்கிறார் அம்பேத்கர்.

2006 ஆம் ஆண்டு சமூக வளர்ச்சி மய்யம் (சி.எஸ்.டி.எஸ்.) புதுடில்லியில் இயங்கும் ஊடகங் களின் சமூகப் பின்னணி குறித்த கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, டெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் 37 இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கக்கூடிய 315 நபர்களைக் கண்டறிந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் இந்தி அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் 90 சதவீதம் பேரும், தொலைக்காட்சிகளில் 79 சதவீதம் பேரும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் முன்னேறிய ஜாதியினர். இதில் 49 சதவீதம் பேர் பார்ப்பனர்கள். ஒருவர்கூட தலித்தோ, ஆதிவாசியோ இல்லை. ‘சூத்திரர்’ என்ற பிரிவில் உள்ளவர்கள் 4 சதவீதம்; முஸ்லிம்கள் 3 சதவீதம் (இவர்களின் மக்கள் தொகை 13.4 சதவீதம்). இது பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை. மிகப் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமை யாளர்கள் யார்? 4 பெரிய ‘தேசிய’ நாளேடுகளில் மூன்று வைசியர்களிடமும், ஒன்று பார்ப்பனரிடமும் இருக்கிறது. ‘டைம்ஸ்’ குழுமம் (பென்னட் கோல்மென் அண்ட் கோ லிமிடெட்) நடத்தும் பல பத்திரிகைகளில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடும், ‘டைம்ஸ்’ 24 மணி நேர தொலைக்காட்சியும் அடங்கும். இதன் உரிமையாளர் ‘பனியா’ (சமணர் குடும்பம்) ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டின் உரிமையாளர் ‘பரியாஸ்’ என்ற பிரிவினர். இவர்கள் மார்வாரி பனியாக்கள். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமமும் ‘கோயாங்கா’ எனும் மார்வாரி பனியாக்களுக்கே சொந்தமானது. ‘இந்து’ நாளேடு, பார்ப்பனர் குடும்பத்துக்கு உரிமையானது. இந்தியா விலே அதிகம் விற்கக்கூடிய ‘தய்னிக் ஜெக்ரான்’ இந்தி நாளேடு, கான்பூரைச் சார்ந்த பனியாக்களான குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது. மிகவும் செல்வாக்குகளை மற்றொரு இந்தி நாளேடான ‘தைனிக் பாஸ்கர்’ அகர்வால் என்ற பனியாவுக்கு சொந்தமானது. குஜராத் பனியாவான அம்பானி குடும்பம் - 27 தேசிய, மாநில தொலைக்காட்சிகளின் முக்கிய பங்குதாரர். இவை அனைத்தும் அம்பானி குழுமத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரும் செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ‘இசட் டி.வி.’யின் உரிமையாளரான சுபாஷ்சந்திரா ஒரு பனியா. தென்னிந்தியாவில் ஜாதியத்தின் வெளிப்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக ஈநாடு குழுமம் பல செய்தி பத்திரிகைகளோடு உலக அளவில் திரைப்பட நகரங்களையும் 12 தொலைக்காட்சி அலை வரிசைகளையும் நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர் ரமோஜிராவ், இவர் ஆந்திராவைச் சார்ந்த ‘கம்மவா’ என்ற விவசாயம் செய்யும் ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர் பார்ப்பன-பனியாக்களைப் போல் இந்தக் குழுமம் கொடிகட்டிப் பறக்கிறது. மற்றொரு ஊடகக் குழுமமான ‘சன்’ நிறுவனம் மாறன்களுக்குச் சொந்தமானது. இவர்கள் ‘பிற் படுத்தப்பட்டோர்’ என்று அழைக்கப்படுகிறார்கள்; அரசியலில் செல்வாக்குள்ளவர்கள் - என்று பட்டிய லிட்டுள்ளார் அருந்ததிராய்!

Pin It