ஜல்லிக்கட்டிற்காகப் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் அவர்களைப் பாதுகாத்த உழைக்கும் மக்களையும் தாக்கிய அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 12-2-2017 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்களும், மே பதினேழு இயக்கத் தோழர்களும், பல்வேறு இளைஞர்களும் காவல்துறை மற்றும் அரசின் அடக்குமுறையைக் கண்டித்துப் பேசினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக தோழர் மகேசு அவர்களும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தோழர் தன்வீர் அவர்களும், தமுமுக தோழரும் உரையாற்றினர். புத்தர் கலைக்குழு தோழர்கள் பறை இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
'நாங்கள் ஜல்லிக்கட்டிற்காக மட்டுமே கூடவில்லை. தமிழர்களின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒன்று கூடுவோம்' என்று இளைஞர்கள் முழங்கினர்.
காணொளி பதிவுகள்
ஜல்லிக்கட்டு தாக்குதல்-காவல்துறை மற்றும் அரசினைக் கண்டித்து முழக்கம்
புத்தர் கலைக்குழு தோழர்கள் பறையிசை
தோழர் மகிழினி மணிமாறன் பாடல்
தோழர் மணிமாறன் உரை - பாடல்
தோழர் பன்னீர் உரை
ஜல்லிக்கட்டு போராட்ட தோழர் கீதா உரை
ஜல்லிக்கட்டு போராட்ட தோழர் உரை
ஜல்லிக்கட்டு போராட்ட தோழர் உரை
தோழர் அருண் காளிராஜா உரை
ஜல்லிக்கட்டு போராட்ட தோழர் மைதிலி உரை
ஜல்லிக்கட்டு போராட்ட தோழர் ஜேம்ஸ் உரை
தோழர் தன்வீர் (கேம்பஸ் பிராண்ட் ஒப் இந்தியா) உரை
தோழர் மகேஷ் உரை
தோழர் பிரவின் உரை
தோழர் திருமுருகன் உரை