காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதியுள்ள ராஜீவ் படுகொலை -- தூக்குக்கயிற்றில் நிஜம் நூல் வெளியீட்டு விழா நேற்று 23.11.2012 மாலை 6 மணியளவில் சென்னை தியாகராயநகர் சர்.பி.டி தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்றது.

trichy_velusamy_book_release

நிகழ்விற்கு பிரபல நடிகர் இராஜ்கிரண் முன்னிலை வகித்தார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊடகவியலாளர் வெங்கட பிரகாசு தொகுத்து வழங்கினார்.

இந்நூலின் பதிப்பாளர் பேட்ரிசியா பதிப்பகத்தின் உரிமையாளர் ஆபிரகாம் செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார். புலவர் புலமைப்பித்தன் தலைமையுரையாற்ற பழ.நெடுமாறன் அவர்கள் நூலினை வெளியிட்டு உரையாற்ற தியாகி கோவிந்தராசு, ஈழத்துக்காந்தி டேவிட் அய்யா ஆகியோர் நூலினை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து இயக்குநர் புகழேந்தி, ஓவியர் புகழேந்தி, வழக்கறிஞர் புகழேந்தி, நடிகர் இராஜ்கிரண், தோழர் டி.எசு.எசு.மணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.

 

 

Pin It