manithi dramas
"நா(டக)ங்கள்" இது நம்மைப் பற்றியது. அறிந்து கொள்ள, பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வாருங்கள் ...
 
28.04.18 மாலை 5.30 மணிக்கு ரிப்போர்ட்டர் கில்ட்( சென்னை பிரஸ் கிளப் அருகில்) சேப்பாக்கம்.
எழுத்தாளர் ஞாநி- மா ஆக்கத்தில் உருவாக்கப்பட்ட நாடகங்கள்.
 
"நாங்கள்" - எட்டு தனிநபர் குறு நாடகங்கள். நான்கு ஆண்களும், நான்கு பெண்களுமாக மொத்தம் எட்டு பேர்  நடிக்கின்றனர். 
 
பெண்கள் மீதான தொடர் வன்முறைகள் தற்போது குரூரமாக குழந்தைகளை நோக்கி தன் கரங்ளை நீட்டிக்கொண்டிருக்கின்றது. இதற்கான எதிர்ப்புகளும் வலுத்துக்கொண்டுதான் இருக்கிறது. சட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் சமூக மாறுதல் இன்றி இத்தகைய கொடுமைகள் ஒழியாது. மக்களிடையே கருத்தியல் மாற்றத்தை கொண்டுவந்தே ஆக வேண்டும். பெண்களை போகப்பொருளாக காட்டி சினிமா, விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஏற்படுத்தும் மோசமான கருத்தாக்கத்தை சரியான கலை வடிவத்தை கொண்டுதான் உடைக்க வேண்டும். பாலின சமுத்துவத்தை வலியுறுத்தும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நாடகங்களை மறைந்த எழுத்தாளர் தோழர் ஞாநி உருவாக்கி வைத்துள்ளார். அந்த நாடகங்கள் 28/4/2018 அன்று மாலை 5.30 மணிக்கு மனிதி மற்றும் தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் சேப்பாக்கம் ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நிகழ்த்தப்படுகின்றது. இதில் கலந்துக்கொண்டு கருத்தியல் தெளிவை கலைவடிவில் பெறலாம். அதோடு இந்த நாடகங்களை பள்ளி, கல்லூரி, மற்றும் உங்கள் பகுதிகளில் நிகழ்த்த விரும்பினாலும் நிகழ்த்தப்படும். அனுமதி இலவசம்.. வாருங்கள் தோழர்களே பாலியல் வன்முறைகளுக்கெதிராய் கரம் இணைப்போம். 
 
நாடகத்தில் வரும் மனிதர்களின் கதை வெறும் கற்பனைக் கதை அல்ல. அவை ஒவ்வொரு நிமிடமும் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக அவலங்கள. பாலினப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சமூகத்தில் பெண்கள்/ஆண்கள்/பாலினத்தை உறுதிபடுத்தாதவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், நெருக்கடிகள் என்ன! என்பதை இந்த 8 கதாபாத்திரங்கள் உணர்த்தும். பாலினம் பற்றிய சரியான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தி மனித உரிமைகள் அனைவருக்குமானது என்பதை வலியுறுத்தும்  விதமாகவே இந்த நாடகங்கள். 
 
அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்!!
 
தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்
மனிதி( பெண்களுக்கான பொது மேடை)
ஆக்ட்( தியேட்டர் குழு )
Pin It