“தோழர் அம்பேத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவு தான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப் பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திர மல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது”. - தோழர் பெரியார், குடி அரசு - 20.10.1935

“தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும்மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லBம் பேரையாவது மதமாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜன மாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்”. - தோழர் பெரியார், குடி அரசு - 20.10.1935

“தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுபவரானாலும், தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்”. -குடி அரசு, தலையங்கம் - 20.10.1935

“இந்து மதத்தில் இருந்து அம்பத்காரும், தாழ்த்தப்பட்டவர் களும் மாத்திரமே அல்லாமல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர் களில் தீண்டாதவர்கள் என்பவர்கள் நீங்கிய சுமார் 17 கோடி பேர்களும் கூட இந்து மதத்தை விட்டு விலக வேண்டியவர்களேயாவார்கள்”. - தோழர் பெரியார், குடி அரசு - 27.10.1935

“நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூல் அறிமுகவிழா

தோழர் அம்பேத்கரின் மதமாற்ற உரைகள்.

வெளியீடு: ‘தலித்முரசு’ ஏடு

11.12.2016, மாலை 5 மணி, வி.ஜி.எஸ் அரங்கு, திண்டுக்கல்.

நூலின் விலை.ரூ150

அறிமுக உரை: தோழர்கள் புனிதப்பாண்டியன், டாக்டர் தாயப்பன், சுகுணா திவாகர், பூவை புலிகேசி மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், பாட்டாளி மக்கள்கட்சி, ஃபார்வர்டு ப்ளாக், தேவாங்கர் சமுதாய முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் அறிவுஜீவிகள் மன்றம், புரட்சிகர இளைஞர் முன்னணி, சி.பி.எம்.எல். ( மக்கள் விடுதலை) அமைப்புகளின் பொறுப்பாளர்கள்.

ஒருங்கிணைப்பு: காட்டாறு. தொடர்புக்கு: இராவணன் 9786889325

Pin It