balachandran students movement

திட்டமிட்டு மதக் கலவரங்களைக் மிகவும் நேர்த்தியாக செய்யக் கூடியவர்கள், செய்தவர்கள் இந்த RSS, பா.ஜ.க கும்பல்கள். இவர்கள் தான் இன்று நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்று கல்வியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த செயலை முறியடிக்க பல மாணவர்கள் இன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாசிஸ்ட்கள் தங்களுக்கு ஏதிராக உண்மையை யார் சொன்னாலும் அவர்களைக் கொலை செய்வது என்பது வரலாறு நெடுகிலும் நடந்த ஒன்று. அதன் தொடர்ச்சிதான் ரோஹித்தும்.

இந்த பாசிஸ்ட்களின் கலவர வரலாற்றில் 1990’இல் அத்வானி நடத்திய “ராம் ரத யாத்திரை” மிகவும் முக்கியமான ஒன்று. “ராம் ரத யாத்திரை” என்னும் பேரில் இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஒரு மத கலவரத்தைத் திட்டமிட்டனர். 1990 செப்டம்பர் மாதம், 25ஆம் தேதி அத்வானி குஜராத் மாநிலத்தில் இருந்து “ராம் ரத யாத்திரை”யைத் துவங்கினார். இந்த யாத்திரை 1900 அக்டோபர் 30 அன்று அயோத்தியில் முடிந்தது. வலி நெடுகிலும் இந்து மத வெறியை வளர்ப்பதற்காக பல கூட்டங்களில் பேசினார். இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் இருந்து அனைவரும் ராமர் கோவில் கட்ட அயோத்திக்கு புறப்பட வேண்டும் என்று கூறினார். இவ்வாறு ஒரு மிக பெரிய மதக் கலவரத்தை திட்டம் இட்டு நிறைவேற்றியவர்கள் இந்த பாசிஸ்ட்கள்.

பா.ஜ.க என்ற ஒரு கட்சியின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று “ராம் ரத யாத்திரை”. இந்த கலவரத்தைப் பற்றிய “In the name of god” என்னும் ஒரு ஆவணப்படத்தை ஆனந்த் பட்வர்த்தன் இயக்கி உள்ளளர். இந்த பாசிஸ்ட்களின் உண்மையான முகங்களை நாம் உணர வேண்டும். உணர்ந்தால் மட்டுமே நாம் போராட்டங்களை வகுக்க முடியும். இந்த “In the name of god” என்னும் ஆவணப்படத்தை நாங்கள் (பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் )திரையிடுகிறோம்.

நாள் : 20-மார்ச்-2016

நேரம் : மாலை 4.30

இடம் : இக்சா அரங்கம், எழும்பூர்.

பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

Pin It