சிறப்புரையாளர் பற்றிய குறிப்பு:

1976இல் இத்தாலியில் பிறந்த மார்ஸெல்லொ முஸ்ட்டோ, கனடாவின் டொரோன்டோ நகரிலுள்ள யோர்க் பல்கலைக் கழகத்தில்   சமூகவியல் கற்பிக்கிறார். இளந்தலைமுறையைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மார்க்ஸிய அறிஞர்களிலொருவரும் இத்தாலிய, ஆங்கில, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்ச்சுகீசிய, ஜெர்மன் மொழிகளில் புலமை பெற்றுள்ளவருமான இவரது நூல்களும் கட்டுரைகளும் இருபத்தி இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளன. தென் கொரியா, சீனா, ஆர்ஜென்டினா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் மார்க்ஸிய ஆய்வு ஏடுகளின் ஆசிரியர் குழுவில் உறுப்பியம் வகிக்கும் மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் நூல்களில் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளவைகளில் சில பின்வருமாறு: Karl Marx’s ‘Grundrisse’: Foundations of the Critique of Political Economy 150 Years Later (2008) - Indian Edition, New Delhi, Manohar Publications, 2013); Marx Today and the International after 150 Years: Labour Versus Capital, Then and Now, 2015). இவை ரூட்லெட்ஜ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் அவர், ஆங்கிலத்தில் முதன் முறையாக வெளிவருகின்றதும் முதல் அகிலம் எனப்படும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் முக்கிய ஆவணங்களை உள்ளடக்கியதுமான Workers’ Unite! The International 150 Years Later (Bloomsbury 2014) என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். 

இந்த நூலில், முதல் அகிலத்தின் வரலாற்றைக் கூறும் பகுதி எஸ்.வி.ராஜதுரையால் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்’ என்னும் தலைப்பில் நியூ செஞ்சுரி புக்  ஹவுஸால் 2015 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் ஆக்கங்களிலொன்று முதன் முதலில் வெளிவந்தது தமிழில்தான். அவர் இத்தாலிய மொழியில் மார்க்ஸ் பற்றி எழுதியுள்ள ஆய்வுரையின் ஆங்கில மொழியாக்கம் ‘Rethinking Marx’ என்னும் தலைப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.

svr ncbh 600

Pin It