-----------------------------------------------------------------------------------------------------------------
நாள் : 09.2 .2016 - செவ்வாய், மாலை 4.00 மணி / இடம் : சென்னை.
----------------------------------------------------------------------------------------------------------------
• விழுப்புரம் மாவட்டம் பாங்காராம் கிராம S.V.S. சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகள் படுகொலை !
• மாணவர்களின் உடல்களை கிணற்றில் வீசி தற்கொலை நாடகம் !
• சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் சண்முகப்பிரித்தா சந்தேக மரணம் !
• ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர் ரோகித்வெமுலா தற்கொலை!
• நடுவண் அமைச்சர்கள் பண்டாரு தத்ரேயா, ஸ்மிருதிராணியை அமைச்சரவையிலிருந்து விலக்கு ! கைது செய்!
• கொல்லப்பட்ட மாணவிகள் சரண்யா, மோனிசா, பிரியங்கா உயிர்களின் விலை ஒரு லட்சம் மட்டும்தானா ? தமிழக அரசே! மூன்று பேர் மரணத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள் !
• விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத், லெட்சுமி இருவரையும் பணியிடை நீக்கம் செய் !
• MGR பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமியை பொய்யான வாங்குமூலம் அளித்ததற்காக நடவடிக்கை எடு !
• கல்லூரிகளுக்கு அங்கீகாரம் இல்லையெனில் தேர்வு நடத்தியது எப்படி?
• அங்கீகாரம் இல்லையெனில் கலந்தாய்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்தது ஏன்?
• தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாகம் செயலற்றுவிட்டதா? ஊழல், இலஞ்சம் முறைகேட்டின் ஊற்றுக்கண்ணான தமிழக அரசே! தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகு !
• கட்டிடம், அலுவலகம், நூலகம், ஆய்வகம், விடுதிவசதி இல்லாத கல்லூரிக்கு தன்னிறைவுச் சான்றிதழ் அளித்தஅதிகாரிகள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை?
• பேராசிரியர்கள், பணியாளர்கள், நூலகர், காவலர், விடுதிக்காப்பாளர் போன்ற ஊழியர்கள் இன்றி, மாணவர்களையே அனைத்துப்பணிகளுக்கும் பொறுப்பாக்கியதை கண்டிக்காத உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
• இலட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக மாணவர்களிடம் வசூலிக்கும் கல்லூரிகள் உரிய இரசீது செலுத்தாத கொள்ளைக்கு விடிவு எப்போது ?

பொதுமக்களே ! மாணவர்களே ! இளைஞர்களே !

கல்வியைத் தனியார் மயமாக்கி! கட்டணக் கொள்ளையை தேசிய மயமாக்கிய கல்விக் கொள்கைக்கு எதிராக - இதை அனுமதிக்கும் இந்திய, தமிழக அரசுகளுக்கு எதிராகப் போராட அணிவகுப்போம் ! கல்வியை சனநாயகமாக்குவோம்!

- தமிழக மக்கள் புரட்சிக் கழகம், 9047521117

Pin It