america 350

மார்ச் 12  - 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் உணர்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில். அதுவே அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுகையிடவேண்டுமென்பதை விளக்குகிறது என்பதால் அதனையே இங்கே தருகிறோம்.

ணர்வாளரின் கேள்வி: தோழர்அமெரிக்க எதிர்ப்புஐநா எதிர்ப்பு சரியே!! ஆனால் இந்நேரத்தில் இந்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்குவதுதானே சரியாக இருக்கும்ஐநா விசாரணைக் குழுவை அனுமதிக்காதமாகாண சபை தீர்மானம் குறித்து வாய் திறக்காதராணுவ குவிப்பு பற்றி பேசாத இந்தியப் பொறுக்கிகளை அதிகம் அம்பலப்படுத்த வேண்டுமே!!

நம் மீது இறைமை கொண்டாடும் இந்திய பொறுக்கிகளை நாம் இன்னும் உரிமையுடன் எதிர்க்கலாமே!!

தோழர்திருமுருகன் காந்தி அவர்களின் பதில்:

இந்தியாவை எதிர்ப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை... இந்தியாவை அம்பலப்படுத்துவது என்பது எந்த விதத்தில் என்பதில் மாறுபடுகிறோம் என்பதை பல அரங்கில் பதிவு செய்ததை இங்கேயும் பதிவு செய்கிறேன்...


இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப் போகிறோமாஅல்லது  இந்தியாவை குற்றவாளியாக்கப் போகிறோமா?.. 

இந்தியாவை அம்பலப்படுத்துகிறோம் என்றால் யாரிடம் அம்பலப்படுத்துகிறோம்? .. இந்தியர்களிடமா,தமிழர்களிடமாசர்வதேசத்திடமா?... 

இந்தியாவை குற்றவாளியாகவும்இந்தியா சர்வதேச விசாரணையில் விசாரிக்கப்பட வேண்டுமென்பதுவுமே மே17இயக்கத்தின் கோரிக்கைஇதற்காகவே நாங்கள் போராடவும் செய்கிறோம்இந்தியாவிடமோஅமெரிக்காவிடமோ,இங்கிலாந்திடமோ இனப்படுகொலைக்கான விசாரணைக்கான கோரிக்கை வைப்பதுவும்இலங்கையிடம் இதே கோரிக்கையை வைப்பதுவும் வேறல்ல.... குற்றவாளியாகவே இந்தியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தல் வேண்டும்

அதைச் செய்யவேண்டுமென்றால்இந்தியாவைப் பற்றிய விவாதமும்அதற்குரிய ஆதாரமும் மக்கள் மன்றத்தில் வைத்து நிரூபிப்பதும்பிரச்சாரம் செய்வதும் அவசியம்அவ்வகையிலேயே மே17 இயக்கமும் பிரிமென் மக்கள் தீர்ப்பாயத்தில் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை முன்வைத்து இந்தியாவும் இனப்படுகொலைக்காக விசாரிக்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது

இதற்கு அடுத்த படியாக நாம் இதை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்ஏனெனில் இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு உள்ளூர் அளவில் பேசுகின்ற அதே நேரத்தில் சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்துவதே அரசியல் செயல்பாடுதமிழகம்இந்தியாசர்வதேசம் என மூன்று தளங்களில் இது பதிவு செய்யப்படல் அவசியம்இந்தியாவை குற்றவாளியாக்காமல் ஈழ விடுதலை சாத்தியம் கிடையாது..

மேலும் இம்மாதங்களில் நிகழும் நிகழ்ச்சி நிரல்கள் என்பது அமெரிக்காவினால் முடிவு செய்யபட்டு நிர்வகிக்கப்படுகிற நிகழ்வுகளே... இனப்படுகொலை என்பதை மறுத்ததும்மதச்சிறுபான்மையினர் என வரையறுத்ததும்பயங்கரவாதத்தின் மீதான போர் என்றதும்ஒன்று பட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் என்பதுவும் அமெரிக்காவினால் ஐ.நா வழியாக நிர்பந்திக்கபடுகின்ற ஒரு நடவெடிக்கைஇந்த நடவெடிக்கைக்காக அமெரிக்கா அரசு பலமுனை நடவெடிக்கைகளை எடுத்து வருகிறதுஇதை ஒவ்வொரு வாரமும் எங்களது பதிவுகளில் அம்பலப்படுத்தி வருவதை படித்தால் புரிந்திருக்கலாம்இருந்த போதிலும் சுறுக்கமாக சொல்கிறேன்.

1. இந்தியாவின் யுக்தி என்பது 13வது சட்டதிருத்தம்வடக்கு மாகாண தேர்தல்தமிழர்களுக்கான குறைந்த பட்ச அதிகாரம்ஒன்றுபட்ட இலங்கை., இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தல்இலங்கை மீதான விசாரணையை தடுப்பதுவும்ஈழ கோரிக்கையை முறியடிப்பதற்கான வேலைகள்.

2,அமெரிக்காவின் யுக்தியாக முன்னெடுக்கப்படுவதுஇனப்படுகொலை என்கிற வார்த்தையை முற்றிலுமாக நிராகரித்து அகற்றுதல்இலங்கை அரசே ராணுவம்-புலிகள் இருவரையும் விசாரித்தல்இலங்கை அரசே ராணுவம்-புலிகளுக்கு தண்டனையை இலங்கையின் அரசியல் சாசனத்திற்குள் (குற்றவியல் சட்டத்திற்குள் அளித்தல்).. இதன் வழியாக குற்றவாளிகளை கையாளுதல்அதே வேளையில் பாதிக்கபப்ட்ட தமிழ்சமூகம் மீதான தனது செயல்திட்டமாகதேசிய இனவரையறைக்குள் தமிழர்களை கொண்டு செல்லவிடாமல் தடுத்தல்இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமையை தமிழர்கள் சர்வதேச அளவில் முன்னெடுக்காமல் முறியடித்தல்,ஈழவிடுதலை சாத்தியமற்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்த வித அதிகாரமுமின்றி இலங்கையர்களாக வாழுதல்,

இதற்காக போருக்கு பிந்தய நிலையை கையாளும் ‘நல்லிணக்க’ யுக்தியைநடைமுறை படுத்தல்இந்த நல்லிணக்கம் என்பதை கடந்த காலத்தில் வெள்ளையர்கள் நலனுக்காக வெற்றிகரமாக செயல்படுத்திய தென்னாப்பிரிக்கா அரசினை இச்செயல்திட்டத்தில் வைத்தல்என்பதாக விரிகிறதுஅதே அளவில் அமெரிக்கா புலிகள் மீதான போரை ‘பயங்கரவாதத்தின் மீதான போராக’ வரையறுத்தது என்பதை பூத கண்ணாடிகொண்டு பார்கக் வேண்டிய நுண்ணிய நகர்வுஇதன் மூலம் போர் நியாயப்படுத்தப்படுகிறதுநியாயமான கோரிக்கைக்கான போரில் போர்க்குற்றத்தினை இலங்கை ராணுவம் இலங்கை அரசினை மீறி நிகழ்த்தி இருக்கலாம் அல்லது இலங்கை அரசின் ஒரு சிலரின் ஒப்புதலோடு நிகழ்த்தி இருக்கலாம் இருந்த போதிலும் இக்குற்றச்சாட்டினை இலங்கை அரசு (ஸ்டேட்விசாரிக்கும்இதற்கான பணியை இலங்கைக்குள் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதை இலங்கைக்கான தெற்காசியவிற்கான அமெரிக்க அதிகாரிகள் நாள்தோறும் அறிக்கை விடுவதை கவனிக்க இயலும்.

இந்தியாவை குற்றவாளியாக ஒரு சர்வதேச விசரணையை ஐ.நாவில் கோருவது என்பதுதான் தமிழக தமிழர்களின் நேர்மையான அரசியலாக இருக்க முடியும்இதை மே 17 இயக்கம் பல தொலைக்காட்சி (தமிழ் -ஆங்கிலபேட்டிகளில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறோம்,. 2013இல் நேரலையில் இந்தியாவை பொறுக்கி அரசு என்றே வரையறையும் செய்தோம்பு.சன் சத்யம் இமையம்நியூஸ் எக்ஸ் ஆகிய தொலைகாட்சியில் இந்திய் அதிகாரிகளின் பெயர்களோடு அவர்களையும் விசரிக்கவேண்டுமென்றும் பதிவு செய்திருக்கிறோம்மக்கள் மன்றத்தில் பொது கூட்டங்களில்ஆர்பாட்டங்களில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறதுஇதே கோரிக்கையை முன்னெடுத்து கைகோர்க்க விரும்புகிறோம்

துரதரிஸ்டவசமாக பிரிமென் தீர்ப்பாயத்தில் இந்தியா-அமெரிக்கா -இங்கிலந்து குறித்த இனப்படுகொலை கூட்டாளிகள் பற்றிய வர்லாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாவோஅது குறித்து விவாதிக்கவோ பலருக்கு மனம் வரவில்லைஅதை மறைக்கவும்,புறக்கணிக்கவுமே விரும்பியது மட்டுமே வெளிப்படையாக தெரிந்ததுஇந்தியாவை அம்பலப்படுத்த வேண்டுமென்று சொல்லுபவர்கள் கூட இது குறீத்து கள்ளமெளனம் காத்தார்கள்மேற்குலகு சார்பு நிலைப்பாடு வெளிப்படையாக முக்கிய தருணங்களில் எடுக்கப்படுகிறது.. வேறெந்த போராட்டத்தினையும் விட அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தினை மே17 எடுக்கும் பொழுது கேள்விகள் அதிகமாக கேட்கப்படுவ்தும் வாடிக்கையாக இருக்கிறது என்ன செய்ய தோழர்.

பல தோழர்களின் குழப்பத்திற்கு ஒரு விளக்கத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன்... .நாவின் மனித உரிமைகமிசனின் வருடாந்திர நிகழ்வு என்பது ஈழ விடியல்க்கான நிகழ்ச்சி நிரலாக போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.இது உண்மையல்ல... .நாவின் மனித உரிமைக் கமிசனின் கூட்டம் அமெரிக்காவினால் தனது பிராந்திய நலனுக்காக பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் இருந்தே இது போன்ற பிம்பம் கொண்டுவரப்பட்டது. 2010, 2011இல் இவ்வாறாக இது இல்லைஅமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்திலும்,இலங்கையிலும் காலூன்ற தமிழர்கள் பிரச்சனையை பகடைகாயாாக பயன்படுத்துகிறதுஇந்த அமர்வு முடிந்த பின்னர் நிகழும் அமெரிக்காவின் நடவெடுக்கையை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பல விடயங்கள் புரியும்.

கடந்த 2014 .நா அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்ததாக சொல்லப்ப்ட்ட பின்னர் அடுத்த ஒரு மாதத்திற்குள் இலங்கை-அமெரிக்காவின் ராணுவ பயிற்சி ஒப்பந்தம்வர்த்தக கூட்டுறவு குறித்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தனஅதே நேரம் ராஜபக்சே தனது ஆட்சியை மாற்றுவதற்காக அமெரிக்கா முயலுகிறது என்று பகிரங்கமாக அறிவித்தார்மேலும்அமெரிக்கா தன்னை சர்வதேச தண்டனை வாங்கிதர முயலுகிறது,எக்காரனத்திலும் இலங்கையை காப்பேன் என்றார்இதற்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்கே பேட்டி அளிக்கும் பொழுதுஅமெரிக்காவின் விசாரணை இலங்கையை பாதிக்காதுமாறாக அது ராஜபக்சேவை வேண்டுமானாலும் பாதிக்கும் என்றார்மேலும் இவ்விசாரணை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு செல்லக் கூடியதல்ல என்றும் பதிவு செய்தார்.

கடந்தமாதம் அமெரிக்காவின் அதிகாரி இலங்கை நல்லிணக்க செயல்பாட்டில் முன்னேறி இருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்இலங்கை உடன் அமெரிக்கா முரண்பாட்டினை வளர்த்து தனது உறவினையும்தனது நலனையும் கெடுத்துக்கொள்ளாது என்று பதிவு செய்திருக்கிறார்ரணில் அமெரிக்காவின் கைக்கூலியாகவே செயல்படுவார்இதை 2011 மே மாதம் பதிவு செய்த பொழுது எங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் வந்ததுரணீல் அமெரிக்கா சார்பும்மைத்ரிசம்பந்தன் வழியாக இந்தியாவின் சார்பும் திணீக்கப்படும்

சிங்கள மக்கள் மீது செபா பொருளாதார ஒப்பந்தத்தின் சரத்துகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்மூலமாக சிங்கள மக்களை சுரண்டும் முயற்சியை மோடி நாளை முன்னெடுக்க இருக்கிறார்,... உண்மையில் நமது கோரிக்கை இலங்கையின் உழைக்கும் மக்கள் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணீக்க வேண்டும் என்பதாகவே இருக்க முடியும்.

இந்தியாவிடம் எந்த காலத்திலும் மே17 இயக்கம் கோரிக்கை வைக்காது தோழர். ... இந்தியாவின் மீது விசாரணை தேவைஇந்தியா ஒரு கொலையாளி என்பதுவே எமது நிலைப்பாடு... இந்தியாவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்துவது தான்நமது வரியை வாங்கி நமக்கு துரோகம் இழைத்த இந்தியாவிற்கு நாம் செலுத்தும் நன்றி கடன்.

ஆகவே இந்தியாவை எதிர்ப்பதற்கும்அம்பலப்படுத்துவதற்குமான பணி வெகு மாதத்திற்கு முன்பிருந்தே துவங்கப்பட்டு மார்ச் மாதத்தில் அதற்கான பணியை ஜெனிவாவில் தமிழக தமிழர்கள் செய்ய வேண்டும்....பொதுவாக இந்த கூட்டத்தொடரை தமது நலனுக்கு பயன்படுத்தும் அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிவது அவசியம்.. இந்த ஒரு மாதத்தில் தான் அமெரிக்கா எதிர்ப்பு தீவிரமடையவேண்டும்அமெரிக்கா தன்னை யோக்கியவானாக தமிழக தமிழரிடத்தில் காட்ட விரும்பினால் இனபடுகொலை விசாரனையை வைக்கும்.. இல்லையெனில் அம்பலப்படும் ...

அமெரிக்காவின் மிகக் கடுமையான அதே நேரத்தில் அதிகாரமிக்க தெற்காசியாவின் வலிமை மிக்க அதிகாரியாக இருந்தவர் ராபர்ட் பிளேக்... இவர் தான் புலிகளை ராணூவ ரீதியாக கையாள வேண்டுமென்றவர்அமைதி பேச்சு வார்த்தை உடைக்கப்பட்டதிலும்புலிகளின் நிதி ஆயுத வழித்தடங்களையும் முடக்க குழுக்களை ஏற்படுத்தியவர்.... இந்த நபர் 2009 பிப்ரவரி மாதம் புலிகள் ஒடுக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக் கழகத்தில் பதிவு செய்தவர். ( போர் உச்சத்தில் இருக்கும் தருணத்தில்) ... இந்த நபர் எந்த ஒரு தருணத்திலும் தமிழர்கள் போராட்டத்திற்கு பதில் சொன்னவரோகருத்து சொன்னவரோ கிடையாது .. சொல்லப்போனால் நம்மை ஒரு பொருட்டாக மரியாதை கொடுத்தவரும் கிடையாது... இந்த நபர் அச்சப்பட்ட தருணம் ஒன்றே ஒன்று தான்.

america invitatiom 3502013இல் மாணவர் போராட்டம் நடந்த தருணத்தில் ஆயிரத்திற்கும் நெருக்கமான மாணவர்களை திரட்டி சாஸ்திரி பவனை முற்றுகை இட்டுஅதன் பின்னர் ப.சிதம்பரம் வீட்டினை முற்றுகை இட்டனர். . .சிதம்பரம் வீட்டிற்குள்ளும் சில மாணவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்கதவினை திறந்த நிலையும் ஏற்பட்டது

இரு இடத்திலும் புலிக்கொடியும் ஏற்றப்பட்டது.. இதை செய்த பின்னர் மாணவர்கள் கே.எஃப்.சியை முற்றுகை இட்டனர்இந்த நிகழ்வினை மே17 இயக்கத்தின் மாணவ தோழர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்

இந்நிகழ்வு இது நாள் வரை ஊடகத்திலும்புகைப்படமாகவோ வரவில்லை.. இச்சம்பவம் நடந்த இரவில் ராபர்ட் பிளேக் அவசரமாக அறிக்கை தமிழ் மானவர்களை நோக்கி விட்டார் “ அமெரிக்கா தீர்மானம் திருத்தப்பட்டதில் அமெரிக்காவிற்கு அதிகம் பங்கு கிடையாதுஇந்தியாவே இதைச் செய்தது “ என்றார்.... 

இதை ஏன் சொன்னார்?...மாணவர்கள் போராட்டம் உலகின் எந்த அரசினையும் நிலை குலைய வைக்கும் இத்தருனத்தில் இந்திய அரசு(சாஸ்திரி பவன்), இந்திய அமைச்சர் (.சிதம்பரம்), ஏகாதிபத்திய் வர்த்தகம் கே.எஃப்.சிஆகியவற்றினை ஒரே நேர்கோட்டில் எதிரியாக பார்க்க மாணவன் பார்ப்பது தனது நீண்ட கால நலனுக்கு ஏற்றதல்ல.. 

மானவர்கள் தமது பண்பாட்டிற்கு அடிமையாக இருப்பதையே ஏகாதிபத்தியம் விரும்புகிறது.. இதனாலேயே கே.எஃப்.சி கடந்த வருடமும் மே17 தோழர்களால் முற்றுகை இடப்பட்டது..

2013இல் இதை செய்த பொழுது ராபர்ட் பிளேக் பதறியது இதற்காகவே.. அவர் மட்டுமல்ல சுப்பிரம்ணிய சாமியும் இதனாலேயே மே17 பொறுக்கிகள் என்று தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு டிவிட்டர் பதிவு செய்தார்

அவர் ஒரு படி மேலே சென்று அமெரிக்காவின் சி..ஏவிற்கும்,என்..ஏவிற்கும் தான் மே17 இயக்கத்தினை கவனிக்கச் சொல்வதாக டிவிட் செய்திருந்தார்... (நகைச்சுவையாவர் தான்).. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்......

இவர்களுக்கு வலிக்கிறது எனில் நாம் சரியாக போராடுகிறோம் என்று தானே அர்த்தம்.... மார்ச் மாதம் எதிர்க்கப்பட வேண்டிய அம்பலபட வேண்டிய ஆற்றல் ஏகாதிபத்தியம்.அதை செய்ய விரும்புகிறோம்... இணைந்து கொள்ளுங்கள்..

விளக்கமளிக்க உதவிய சிறப்பான கேள்விக்கு நன்றி தோழர்.

திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம்.

Pin It