1993 வியன்னா மாநாடு முடிந்த இருபதாண்டுகளுக்குப் பின்....
மனித உரிமைச் செயல்பாடுகளின் மீதான விவாதத்தை முன் வைத்து....

மனித உரிமை மாநாடு

21.12.2013, காரிக்கிழமை (சனி) சி.எஸ்.ஐ மைதானம், மூன்றுமாவடி, மதுரை

தலைமை: திரு. மதுரை வீரன், மாநிலக் குழு உறுப்பினர், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்

வரவேற்புரை: திருமிகு. ஜே. ஜோஸ்பின் மேரி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மதுரை

துவக்க உரை

முனைவர் இ. தேவசகாயம்
இயக்குனர், மனித உரிமைக் கல்வி நிறுவனம்

திருமிகு இரமேஷ்நாதன்
அமைப்பாளர், நீதிக்கான தேசிய தலித் இயக்கம்

வழக்கறிஞர் ஏ.கே. இராமசாமி
செயலாளர், வழக்கறிஞர் சங்கம், மதுரை

வழக்கறிஞர் பிரிட்டோ
இயக்குனர், வான்முகில், திருநெல்வேலி

வழக்கறிஞர் காந்தி
உயர்நீதிமன்றம், மதுரை

திருமிகு கருப்பசாமி
அருந்ததியர் மனித உரிமை அமைப்பு, ஈரோடு

வழக்கறிஞர் செல்வமனோகரன்
நுகர்வோர் மற்றும் மனித உரிமைக் குழு, தேனி

திருமிகு. பி. ஜே. அமலதாஸ்
சட்டத்தின் ஆட்சிக்கான மக்கள் இயக்கம்

திருமிகு எஸ். பழனியம்மாள்
மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்

கருத்துரை

இலங்கையில் மனித உரிமை மீறல்களும் ஐ.நா வின் செயல்பாடுகளும்
திரு பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் உரிமைகள்
திரு ஹைதர் அலி
மூத்த தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்

தடுப்பு காவல் சட்டமும், ஒடுக்கப்பட்ட மக்களும்
திரு சி. எ. மல்லை சத்யா
மாநில துணைப் பொதுச் செயலாளர், மதிமுக

தமிழகத்தில் மனித உரிமை மீறல்களும் மனித உரிமை நிறுவனங்களின் செயல்பாடும்
திரு துரை. இரவிக்குமார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

வாக்குரிமையும் சிதைக்கப்படும் சனநாயகமும்
திரு வேல்முருகன்
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

‘வியன்னா’பிரகடனமும் இருபது ஆண்டு கால மனித உரிமை செயல்பாடுகளும்
வழக்கறிஞர் ஹென்றி திபேன்
இயக்க ஆலோசகர், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்

மரணதண்டனையும் அரசியல் தீர்வும்
திரு தியாகு
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

இந்திய சினிமாவும், தூண்டப்படும் வன்முறையும்
திரு மு. களஞ்சியம்
திரைப்பட இயக்குனர்

சிறப்பு அதிரடிப்படையினரால் சித்திரவதைக்குள்ளான மக்களும் 20 ஆண்டுகால நீதிக்கான போராட்டமும்
வழக்கறிஞர் ப.பா. மோகன்
சட்ட ஆலோசகர், தமிழ்நாடு பழங்குடி மக்கள நலச் சங்கம்

பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்
திருமிகு எஸ்.கே. பொன்னுத்தாய்
மாநில செயலாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ஐரோம் சர்மிளா பட்டினி பேராட்டமும் ஆயுத சட்டத்தை திரும்ப பெறுதலும்
திரு புதுவை கோ. சுகுமாறன்
மக்கள் கூட்டமைப்பு

அலைகுடி மக்களும் வாழ்வாதார உரிமை மறுப்பும்
திருமிகு இராதாகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பாளர், அலைகுடி மக்கள் சமூக பாதுகாப்புச் சங்கம்

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகள்
திரு மீ.தா. பாண்டியன்
கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) மக்கள் விடுதலை

மறுக்கப்படும் மாற்று பாலினத்தோரின் உரிமைகள்
திருநங்கை பிரியாபாபு
எழுத்தாளர், சென்னை

மரண தண்டனை விளிம்பில் பேரறிவாளன்
திருமிகு அற்புதம்மாள்
மரண தண்டனைக்கெதிரான கூட்டமைப்பு

திட்டமும், எதிர்கால இயக்க செயல்பாடுகளும்
திருமிகு து. இசக்கிமுத்து
இயக்க மாநில அமைப்பாளர், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்

நெறியாள்கை: தோழர் இ. ஆசீர்வாதம், மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்

நன்றி சொல்ல: திருமிகு. எம். ஜெயலட்சுமி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மதுரை

தோழர்களே வணக்கம்,

நாம் தினந்தோறும் சமூகப் பிரச்சனைகளுக்காக பல்வேறு வழிமுறைகளில் செயலாற்றி வருகிறோம். சமூகத்தில் ஏற்படும் மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஒவ்வொருவரும் மனித உரிமை நிறுவனங்களை நாடி இருக்கலாம். ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கலாம். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கலாம். இதனால் மனித உரிமை நிறுவனங்கள் மீது உங்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த நிறுவனங்கள் எந்த பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது மிகவும் அவசியம்.

அகில உலக மனித உரிமைப் பிரகடனம்

இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகில் அமைதியை, மனித நேயத்தை, பன்னாட்டு நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமென உலக நாடுகளால் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாளில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு 10 ஆம் நாளில் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் திசம்பர் 10 ஆம் நாள் சர்வதேச மனித உரிமை தினமாக உலக நாடுகள் அனுசரித்து வருகின்றன.

டெக்ரான் - அகில உலக மனித உரிமை முதல் மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமையை நிலை நாட்டுவதற்காக பல்வேறு உடன்படிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக அகில உலக மனித உரிமைப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல், சிவில் உரிமைகளுக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளுக்கும் இடையே இணைப்பினை உருவாக்கும் நோக்கில் ஈரான் தேசத்தில் உள்ள டெக்ரான் நகரத்தில் 1968 ஆம் ஆண்டு அகில உலக மனித உரிமை முதல் மாநாட்டினை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியது.

வியன்னா - அகில உலக மனித உரிமை இரண்டாவது மாநாடு

அகில உலக மனித உரிமை இரண்டாவது மாநாட்டினை ஐக்கிய நாடுகள் சபை 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் ஆஸ்திரியா நாட்டிலுள்ள வியன்னா நகரில் நடத்தியது. இந்த மாநாட்டில் மனித உரிமைக்கான உலகளாவிய செயல்திட்டம் மற்றும் வியன்னா பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இனப்பாகுபாடு மற்றும் சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக நாம் போராடவேண்டும் எனவும் பெண்கள் உரிமை, குழந்தைகள் உரிமை, சிறுபான்மையினர் உரிமை மற்றும் பழங்குடியினர் உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தப் பிரகடனம் இருந்தது. வியன்னா மாநாடு முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதே கால கட்டத்தில் மனித உரிமை வரலாற்றில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன.

மனித உரிமைகளுக்கு வலு சேர்க்கும் 20 ஆண்டுகால நிகழ்வுகள்

Pin It