
தேன்கூடு இரசாயனப் புகையால்
மயங்கி கிடக்கின்றன உயிரோடு
எஞ்சியுள்ள தேனீக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
தன் உறவுகளுடன் முல்லைப் பூ
தேனை சிந்தியபடி அங்கே
தொங்கப்போட்டுக்கொண்டு திரிகிறது
சிங்கவால் குரங்கொன்று
தேனுக்காக நாக்கை.
ராணித் தேனீயை குறிவைத்து
ஊர்ந்து கொண்டிருக்கின்றன
'ரா' பெற்றெடுத்த பல்லிகள்
உருண்டுகொண்டிருக்கின்றன
காலச்(அசோக)சக்கரம் பின்னோக்கி!
மொழிக்கு முந்தைய பாதையில்
விடுபட்டுக்கொண்டிருக்கிறது
தமிழர்களின் மென்மைத்தனம்.
- தங்கம் (