muthukalthoor_kalavaram_500முதுகுளத்தூர் கலவரம் - நூல் மறுபதிப்பு
கட்டுரைகள்
தினகரன்

முதற் பதிப்பு  : ஜனவரி 1958
இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2006
மூன்றாம் பதிப்பு : ஜனவரி 2013 (பேரையூர் பெருமாள் பீட்டர் நினைவாக)

வெளியீடு :
யாழ் மை
எஸ். 5, மகாலட்சுமி அடுக்ககம்
26/13, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம்
சென்னை – 600 034, பேசி : 98411 07915

விலை : ரூ.150

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் இடங்கள்
1. பாரதி புத்தகாலயம்
2. கீழைக்காற்று
3. புலம்
4. எதிர் வெளியீடு
5. பரிசல் நூல்நிலையம்
6. கருப்பு பிரதிகள்

***

தினகரன் எழுதிய முன்னுரையிலிருந்து...

'பாயிர மல்லது பனுவலன்றே' என்னும் இலக்கணம் இந்நூலைக் கட்டுப்படுத்தாது. எல்லா விஷயங்களிலும் முதுகுளத்தூர் தொகுதியே ஒரு விதிவிலக்கு. பூக்கடைக்கும் சாக்கடைக்கும் விளம்பரம் எதுக்கு? உலகம் முழுவதும் வீசும் வீச்சம் ஒன்று போதாதா? அது என்ன எவ்விடம் என்று சொல்ல?

காரக்கைத் திறந்தால்தான் அத்தரின் வாசம் மூக்குக்கு வரும் எதையும் திறக்காமலே இதன் வீச்சம் மண்டையிலேறும்.

தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சியாயிருக்கும்; சமீபத்திற்போய்ப் பார்த்தால் எரிச்சலாயிருக்கும். நான் முதுகுளத்தூர் விஷயத்தைக் கிட்ட இருந்து பார்க்கிறேன். மற்றவர்கள் எட்ட இருந்து பார்க்கிறார்கள்; என்னென்னமோ சொல்லுகிறார்கள். நான் என்ன சொல்லுவேன் என்று நீங்கள் புத்தகத்தை விலை கொடுத்து வாங்குவதன் முன்னமேயே நினைத்திருப்பீர்கள். அது அநேகமாய் அப்படியேயிருக்கும். ஆனால் எவ்விதம் சொல்லுகிறேன் என்பதை நிச்சயமாய் உங்களால் நினைக்கவே முடியாது. அது ஒன்றே மற்றவர்கள் இவ்விஷயத்தில் தலையிடுவதற்கும் நான் தலையிடுவதற்கும் உள்ள வித்தியாசம்.

என் தாளை எல்லாருக்குந் தெரியும்; இந்த ஆளை அநேகருக்குத் தெரியாது. கணவனுக்கும் மனைவிக்கும் ஊடே ஒருவருக்கொருவர் புரியாத சில விஷயங்களைத் தெரிவிக்க வருங் குழந்தையைப் போல, இந்நூல் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்துமென்று நம்புகிறேன். தாளின் பெயரும் ஆளின் பெயரும் ஒன்றாயிருப்பதே ஒரு விந்தை. என் பெயரும் தினகரன்; என் பத்திரிகையின் பெயரும் தினகரன். புனை பெயரல்ல, உண்மைப் பெயர். இப்புதுமுறையை இதுவரை எவரும் கையாளவில்லை. ஆளையுந் தாளையும் பிரித்துச் சொல்லுவது ஆரம்பத்திற் சிறிது குழப்பமாயிருந்தாலும் பழகப் பழகச் சரியாய்ப் போய்விடும்.

வணக்கம்.
                
தினகரன்
மதுரை
10.1.1958

Pin It