கீற்றில் தேட...

தனிமை சுட்டது
தடங்கலற்ற நீரோட்டமாக
தவிப்புகளின் குவியல்கள்
கருப்புமை பூசிய
வெள்ளை எழுத்துக்களில்

வெளிப்பட்ட வார்த்தைகள்
உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது
சுயம் இங்கு தவறாய்
பரிமாணித்தது!

விளக்கப்படாக் கேள்வியின்
பதில்கள்,
புதைமணலின் ரகசியங்கள்!

காகிதமாய் கசிங்கியது
உயிர்விட்ட உணர்வுகள்

 

நிஜங்கள் சுடுகின்றன

சில நேரம்
நிஜங்கள் சுடுகின்றன
கத கதப்பு போய்
நெருப்பின் கங்குகளாய்
அழகின் சாயலில்
உருவகத்தின் தொனியில்

பொய் சொல்லியே
தேற்றப்பட்ட மெய்யின்
வன்மை
நீறு பூத்த நெருப்பாய்
கனன்ற படி

உணர்வுக்கொலை
சமர்பிக்கப்படாத
சட்ட சிக்கலுக்கு உட்படாத
ஒரு மௌனித்த தண்டனை
ஊழி தண்டவமாய்

நாடகமேடையின்
இன்றைய வேஷம் 
அரிதாரம் கலைந்தும் கூட
மிச்சப்பட்ட எச்சங்கள்
தோளுக்கு அடியில்
புதைந்து போய்
வடுக்களாய்

- ஷம்மி முத்துவேல், சின்ன தாராபுரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)