
இதயத்தில் விழுந்தது
ஐஸ்க்ரீம் மட்டுமல்ல...
நானும் தான்...
________________________________
நீ பார்க்கும் திசையெங்கும்
முளைக்கிறேன் நான்...
என்றாவது என்னில்
பூத்துவிடுவாய் என்று...
________________________________
உன் இதழ்களைக் கடக்கும்வரை
என் இதழ்களுக்கு உறக்கம்
பிடிக்கவில்லை...
உன் இதழ்களைக் கடந்தபிறகு
அவைகளுக்கு தனிமை
பிடிக்கவில்லை...
________________________________
உன் விழிகளிலேயே
முடிந்து விடுகின்றன
என் பார்வைக்கோணங்கள்...
உன்னில் நான் முடிந்து
விடுதல் போல...
- ராம்ப்ரசாத் (