உங்களுக்கு உகுக்கவேண்டிய
கண்ணீர்த்துளிகள்
ஆவியாகிவிடுகின்றன
உங்கள் உரிமைக்கு
உயர்த்தபடவேண்டிய கைகள்
ஒன்றையொன்று கழுவிக்கொள்கின்றன
உங்களை ஆற்றுப்படுத்தச்
சொல்லவேண்டிய சொற்கள்
சிறுமூச்சாய் வெளியருகிறது
உங்களுக்குச் சிந்தப்படவேண்டிய
சகோதரக்குருதி
உள்ளுக்குள் உறைந்துவிடுகிறது
இதுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது
வீழ்ந்த எங்களின்
நிழல்களின் பேரழிவை
செவிட்டூமையாகப்பிறந்து
தன் பார்வையையும்
இழக்கத்தொடங்குகிறது
இந்தகவிதையும் எங்களைப்போல
- ரவி உதயன் (
கீற்றில் தேட...
கழுவும் கைகள்
- விவரங்கள்
- ரவி உதயன்
- பிரிவு: கவிதைகள்