சொல்ல வந்ததை
முதலில் சொல்லிவிடுவதாக கூறி
மௌனம் பேசத் தொடங்குகிறாள்!
முன் பொழுதும்
முன்னெப்பொழுதும்
ஆரம்ப நிலை இதுவாய்தானிருந்தது!
இன்றேனும் சொல்லிவிடுவதை போல
உடல் மொழிகள்
அறிவித்தவண்ணம் இருந்தன!
பொறுமையிழந்த நேரம்
பின் சந்திப்போம் என்றவாறு கடக்க
இவளும்
அடுத்தொரு நாள்
நமக்கானதாய் இருக்கிறதென்பதை
சொல்லாமல் சொல்லியவாறு
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு!