முயங்குதல் பொருட்டும்
சந்ததி பொருட்டும்
வாழ்க்கைத்துணை பொருட்டும்
முறைப்படுத்துவதாய்
எழுதப்பட்ட விதிகள்
தளர்த்தப்படுகின்றன
புதுமை என்ற பெயரால்...
முன்னெப்போதும் கண்டிராத
குழப்பங்கள் மிஞ்சுகிறது
அதன் பொருட்டு...
கூண்டுக்குள் கற்கவேண்டிய
பாடங்களை
இருள் சூழ்ந்த வனத்திலும்
மெளனம் கவிந்த மயானத்திலும்
கற்றதில் என்ன கண்டீர்கள்...
இந்த மிதவை
அழகாய்த்தான் ஊறுகிறது
அதன் போக்கில்...
ஆனால்,
ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில்
அதன் கதை முடியப்போவது
தெரியுமா உங்களுக்கு...
கீற்றில் தேட...
புதுமைகளால் மிஞ்சும் குழப்பங்கள்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்