தொலைத்துவிடவில்லை
எதையும்
ஆனாலும் தொடர்கிறது
தேடல்கள்
அவசியங்கள் வேண்டி
தேடுகிறோம்
நமக்கான தேடுதல்கள்
முடிந்த நிலையில்
தேடுகிறோம் பிறருக்காய்
சொல், பொருள்,
இன்னபிற தேடுகிறோம்
தேடிக்கொண்டே
இருக்கின்றன உயிர்கள்
உயிரற்றவைகளையும்
தன்னையே தேடுவது
தெய்வீகமாம்
தேடுகிறார்கள்
பிறரில் என்னையும்
பிறர் என்னிலும்
கிடைத்தபாடில்லை எதுவும்
தொடர்கிறது தேடல்கள்
- மதியழகன் சுப்பையா, மும்பை
கீற்றில் தேட...
தேடல்
- விவரங்கள்
- மதியழகன் சுப்பையா
- பிரிவு: கவிதைகள்