உதிர வோட்டமாய்
கண்ணிற்கு காட்சியாய்
நீ என் நெஞ்சில்
பாறையில் பூவாய் பூத்தாய்.
உயிர் நிலவே
உறக்கத்தை உருக்குலைத்தாய்
கனவில் நிஜமாய் வந்து
கண்ணீல் படாமல் மறைகின்றாய்
கருங்கூந்தல் மேகங்களால்
காதல் மழை பொழிகிறாய்
நடையில் நட்டியம் காட்டிடும்
அன்னத்தின் உறவினராய்
சிரிப்பில் இசையை முழக்கிடும்
வண்டுகளின் ரீங்காரமாய்
சிந்தையில் என்றும் தங்கிடும்
என்னவளாய்
என் சுவாசக் கற்றாய்
என் இதய நிலவாய்...நீ
- சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் (