கீற்றில் தேட...


உன்
உடல் மொழி
என்
உடல் மொழி
எது
நம் மொழி ?

உன் உறுப்பு
என் உறுப்பு
எது
நம் பொறுப்பு ?

உன் உணர்வு
என் உணர்வு
எது
நம் கனவு ?

உணர்வுகளால்
வடிக்கப்படவேண்டியவை
உறுப்புகளாய்
கட்டுடைத்தபோதும்......
கனவுகளால்
மொழியப்படவேண்டியவை
சதை
மொழிகளாய் சல்லாபித்தபோதும்......

பச்சை அதிர்வுகளால்
பயணத்தை நிறுத்தாத
நம் ப்ரவாகம்
இப் பிரபஞ்சவெளியில்
மிருக யத்தனங்களை
சம்ஹாரம் செய்யும் .

நெப்போலியன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)