
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்றிருக்கும் பழங்கள்
கிஜூகிஜூன்னு கூட்டமென்று
கண்ணும் மனசும்
விரியவிரியக் கண்டதையெல்லாம்
களிபொங்கச் சொன்னாள் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும்
வீட்டைந்த பின்னும்
கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரித்திருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது
இல்லாதவன் பிள்ளைக்கு.
- ஆதவன் தீட்சண்யா (