
ஆட்சிசெய் யென்று அன்புக் கோளெனக்கு
ஏவித்தான் எழுப்பினாள் எழுந்து மோதிக்
கரைகளைத் தாக்கும் காதல் அலைகளை!
ஆணவம் நீங்கி யாங்கு ஆழ்வேனெனும்
அதிகாரச் சிரசின்றி அவ்விதயத்தே அமர்ந்- தவள்
ஆசைக் கனவோடவள் வேட்கைகட்கிசைய
எதை, எப்படி, எப்போது செய்வதென வறியாதே
விழித்தவ் வலைகளின் திக்கற்ற போக்கில்
மிதக்கிறேன், மூழ்கிறேன், மிதக்கிறேன்
மீண்டும் மீண்டும் பேதை நானென் நாட்டுக்
கோனா யங்கு என்றுமே இருந்திட!
- அ.முத்தன், நியூயார்க் (