
வாலாட்டி
குழைந்து குனிந்து
குதித்து பிஸ்கட்டுத்
துண்டுகளை பிடித்து விளையாடும்
சலுகைகளுக்காக..
நாய்சோப்பு
நாய்த்துண்டு
என்று தலைதுவட்டி விடப்படும்
சீருடை அணிந்து
சிலிர்த்து நிற்கும்
அன்னியர் வந்தால்
விரைத்து நின்று எஜமானனுக்குப்
பதில் தானே குரைத்து விரட்டும்
சிறப்பு வளர்ப்பு நாய்
இட்ட ஏவலை
ரத்தம் சொட்டச் சொட்ட
அபகரித்து வரும்
அதற்காக பதக்கம் பெறும்
பதக்கங்களில்
எஜமான்களின் பெயர் இருக்கும்
இந்த நாய்கள்
யாரைத் துரத்த வேண்டுமோ
அவர்களுக்கு சேவை செய்யும்
- முனைவர் ம.இளங்கோவன் (e_