
நொடிப்பொழுதில் மறந்து விட்டு
நீ மட்டும் எப்படி நிம்மதியாய்..?
காதலின் வலி இருவருக்கும் தானே..
உனக்கு மட்டும் எப்படி
இருதயத்தில் எந்த ரணமுமில்லாமல்..?
நினைக்கக் கற்று கொடுத்ததே நீதான்..
பிறகெப்படி
மறக்க கற்றுக்கொடுக்க
மறந்து போனாய்..??
கண பொழுது நான் தாமதாய்
கல்லூரிக்கு வந்தாலே
கலங்கிப்போகும் நீ எப்படி
வருடக்கணக்கில் என் வரவை மறந்து?
உன்னைப் பார்க்காவிட்டால்
சாப்பிட பிடிக்காதென்று
சதா சொல்லும் சகி நீ எப்படி
பத்திரிக்கையை கூட
பார்சலில் அனுப்பி விட்டு
பாரின் மாப்பிள்ளையோடு
பாயாசம் சாப்பிட்டாய்..!!
ஒரு வேளை..
கல்யாண அவசரத்தில் நாம்
காதலை வி(ற்று)ட்டுவிட்டாயோ..!!!
- அபிரேகா