
நாற்று நட்டு
வரப்பு வெட்டி
களை பறித்து
நாளெல்லாம் கஷ்டப்பட்டு
வாங்கிய கூலியில்
உலையில் போட
அரிசி பருப்பும்
மிச்ச பணத்தில்
பையனுக்கு ஒரு
சொக்காயும் வாங்கிவர
மகிழ்ச்சித் துள்ளலில்
தந்தையைக் கட்டிக்கொண்ட
மகனுடன் அனைவரும்
சாப்பிட அமர்கையில்.....
திடுக்கிட்டு விழித்தாள்
குடிகாரக் கணவனின்
'கதவத் தொறடி' சத்தத்தில்!
- இரா.சங்கர் (r_