
நாலு பையன்களுக்கும்
சர்க்கார் உத்தியோகம்
யார் கேட்டாலும்
பெருமையாகச் சொல்லும்
செல்லம்மாளுக்கு
ஒரு பையனும்
ஊத்தவில்லை
ஒரு வேளை கஞ்சி.
பசியோடு வந்தவளைப்
பார்த்து
“ஒரு வாய் சாப்புட்டு
போம்மா” என்கிறாள்
பப்பாளி விதைக்கும்
கள்ளிப்பாலுக்கும் தப்பிய
அவளது பெண் பிள்ளை.
- கோவி. லெனின்