உச்சரிப்பு
ஒலிஒளி அமைப்பு
வசன திருத்தம்
வாத்தியங்களுடன் இசைந்திழையும் சாரீர சாகித்யம்
உடையலங்காரம் மின்னும் ஒப்பனை பூசி
அடவு பிசகாத ஆட்டத்தோடு
நடந்துகொண்டேயிருக்கிறது நெடுநாளாய் ஒத்திகை
திரைச்சீலை விழுவதற்குள்
ஒரேயோரு காட்சியிலேனும்
மேடையேறி நடித்துப்பார்த்தவர்கள்
யாரிருப்பார் பூமியிலே...?
- ஆதவன் தீட்சண்யா (