கீற்றில் தேட...


Houseவிற்றுவிட்ட வீட்டிலிருந்து
எல்லோரும் வந்தாகிவிட்டது
மனங்களைத் தவிர

கணவன் வாழ்ந்த இடத்திலேயே
கண்மூட ஆசைப்பட்ட
அம்மாவின் கனவு சிதைத்த
வறுமையின் மீதுதான்
வருத்தமெல்லாம்

கடைசிவரை அவள்
அரற்றிக் கொண்டிருந்தது
ஊர் ஊராய்ச் சுற்றி
அப்பா மரவெடுத்துச் செய்த
கதவு ஜன்னல்கள் குறித்துதான்

நேற்றவள்
ஊர்வலத்தின்போது நிகழ்ந்தது
இடிந்த வீடுமுன்
விற்பனைக்கு நின்று
அவை வழியனுப்பி வைத்தது.

மாறன்