
வருஷம்பூரா
காத்திருப்பேன்
உயிரே நீ வரவேணும்
உன் மனசை தர வேணும்.
பாதிநிலா தேய்ஞ்சிருக்கு
பவுர்ணமிக்கு நாளிருக்கு
மீதிநிலா பார்க்கோணும்
நீ முக அழகு
காட்டோணும்.
செவ்வல்லி பூத்திருக்கு
சிறுகுளமும்
நெறைஞ்சிருக்கு
உம்மனசில் பூத்தேனா?
உசிரெல்லாம்
நெறைஞ்சேனா?
களத்து மேட்டு மேல
காத்திருப்பேன்
கனவுமென்னு.
வனத்து மான் போல
துள்ளி வந்து பதில்
சொல்லு
ஆமான்னு சொன்னீன்னா
அரவணைச்சு
கைப்பிடிப்பேன்
வேற பதில் சொல்ல
வந்தா
ஆவியத்துப்
போயிருப்பேன்.
- கோவி. லெனின்