Bharathiஇப்போதெல்லாம்
எனதுக் கனவுகளில் 
அடிக்கடி வருகிறான்
சாயம் போன ஜீன்ஸ் பேண்ட்
டீசர்ட் சகிதமாய்
அதே மீசையுடன்
பழைய பாரதி !

எஞ்சியிருக்கும்
சிலப் புத்தகங்களையும்
வீசி எறிந்து விட்டு
மாடிகளின் உச்சியேறி
“காண நிலம் வேண்டும் !
காண நிலம் வேண்டும் !”
என இரு கைகளையும்
உயர்த்தியடியே குதிக்கிறான்.

விழித்துப் பார்த்தேன்!
எதிரில் சிலையாயிருந்த 
பாரதியின் மீசையில்
சிலந்திகள் வலைப் பின்னிக் கொண்டிருந்தன. 

கதிர்மொழி
Pin It