
சிறப்பு பிரார்த்தனையொன்றிற்கு
தலைமையேற்ற போதகர்
ஒலிவாங்கியின் உதவியால்
நள்ளிரவைத் தாண்டியும்
மறுமை நாளின்
சிறப்பைத்
தெளிவாக சொல்லிக்கொண்டிருந்தார்
பகலெல்லாம்
உறங்கப்போகிற உற்சாகத்தில்.
மறுநாள்
காலை
பணிக்குப் போகவேண்டுமென்கிற
கவலை
என்னைப்போல எத்தனை பேருக்கோ?
- இ.இசாக் (