
வருகிறாள்
வேண்டாவெறுப்பாக
எல்லா விசேஷங்களும்
தோற்றுப்போய் விடுகின்றன
மெளனியாகிவிடுபவளை
மாற்ற முயன்று
புகைப்படத்துக்கு நிற்கையில்
புன்னகையை மீறி
கலங்கிவிடுகின்றன அவளின்
கண்கள்
தலைகுனிந்து கொள்கிறாள்
பளீரிடும் புடவைகளுக்கும்
கண்ணுறுத்தும் வைரங்களுக்கும்
அஞ்சி
பேச்சற்றுத்
திரும்புகையில்
இரட்டிப்பாகிவிடுகிறது
அவள் முகத்தின் கடுகடுப்பு
வீடு நுழையும் முன்
நுழைகிறாள்
அண்டை வீடுகள்
ஒவ்வொன்றாக
இரவல் நகை
கழற்றிக் கொடுத்து
வெளிவருமவள்
முகம் காண இயலாது
குனிந்துகொள்கிறேன்
எப்போதும் நான்
- மாறன்