
விண்முட்டும் கற்பனை மரங்கள்
வளரும் கிளைவிட்டு அதன் மேல்
படரும் கொடியாய் சில சிந்தனை
உலகில் தொலைந்த உயிர்கள்
பலவும் பயிராய் வாழும் மனதில்
வீட்டில் மிஞ்சிய பொருளை
போட்டு அடுக்கிய பரணாய்
நினைக்க மறந்த நிகழ்ச்சிகளும்
மறக்க நினைக்கா மகிழ்ச்சிகளும்
முக்கியமான பொக்கிஷங்களும்
முக்கியமற்ற குப்பைகளும்
பேதமில்லாமல் கலந்து இருக்கும்
வேதனைகளும் குடி இருக்கும்
மனதில் எதையோ தேடும் போது
மூலையில் தெரிந்தது அப்பாவின்..
அழகு முகமும், சிற்ப நாசியும்
அதற்குள் எனை மறந்தாயா மகனே
என்ற கேலி சிரிப்பும், கண்ணில்
எல்லையில்லா அன்பும் பரிவும்!
- பாலசுப்ரமணியன் (