Book in handsதொடர் பணிகளுக்கிடையில் கிடைத்த
ஓய்வு நேரமொன்றில்
கை எடுத்து பிரிக்கிற
புத்தகத்தின் பக்கங்களை மேயாமல்
கண்
இமைகளினுள் பதுங்கி மறையும்.

எழுத்துகளாலான தாள்களை
அறிவாக்கிட
முயன்று
முயன்று தோற்றயர்ந்த மூளை
களைத்துறங்கும்.

பாவம்
புத்தகமொன்றை சுமந்தபடி
கை!


- இ.இசாக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.