
வரவே இல்லை
கதவுடைக்கும் சத்தத்தோடு வரும்
அந்த பால்கார பாட்டிக்கு என்ன ஆச்சு?
சுப்ரபாதபாட்டில் ஏனோ ஆளு சப்தம் குறைகிறது
வாசலில் கோலம் பார்த்தேன்
அது மட்டும் இருந்தது
ஆனால் அது நேற்று வரைந்தது,
இருபத்தியைந்து வருட வேலைக்காரி
செல்விக்கு தான்என்னாச்சு?
மருமகளின் ஒரு நாளில் ஒரு வார்த்தை
‘மாமா வரேன்’ என்பதும்
இன்று மௌனக்கொடி காட்டியதே
பூஜையறையின் அலங்காரிப்பில்
ஒரு குறைவின் சத்தம்
அவசர மிதியில் மகனோ
மோட்டார் சைக்கிளில் பறந்தான்
முன்றாம் கியரில்,
தேடிப்பார்த்தேன்
என் மொபைல் காணவில்லை
தொலைபேசி உதவியோடு
மொபைல் தேட ஆரம்பித்தேன்
தொலை பேசிக்கும் ஏன் இந்த கோபம்?
தொலை பேசியில் பதிவு செய்த
ஒரு பெண்ணின் சப்தம்
சன் செய்திகள் நிர்மலாவின் குரலில்
‘இந்த வசதி இந்த தொலைபேசிக்கில்லை’
குடும்பத்தின் பெரியவர்
என் செல்லப்பேரன்
டிவியின் ரிமோட்டிற்கு அதிபதி
என்ற முன்று பட்டத்திற்கு
சொந்தக்காரனிடம் கேட்டேன்
‘என்னப்பா இதெல்லாம்?’
‘முட்டாள் தாத்தா
இதுகூடவா தெரியல்லை?
இன்று உங்களுக்கு
ரிடையர்மெண்ட்’
- சுரேஷ், சென்னை (