விருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது !
பூத்துக்குலுங்கும் ரோஜா மலரில் தேன் உண்ண
வண்டுக்கு விருப்பம்!
பூவையர் கூந்தலில் இருந்து சிரிக்க அந்த
ரோஜாவுக்கு விருப்பம்!
என் எண்ணங்களில் தோன்றிய விருப்பங்களை
எடுத்துக்கூற எனக்கும் கொஞ்சம் விருப்பம் !
அதிகம் படித்து பட்டம் பெற விருப்பம் !
ஆனால் ஏழ்மையால் ஏற்பட்டதோ திருப்பம் !
படித்த படிப்பிற்கேற்ற பதவி பெற விருப்பம் !
ஆனால் லஞ்சம் என்ற சொல்லால் ஏற்பட்டதோ திருப்பம் !
வேலையில்லாத்திண்டாட்டத்தை ஒளித்திடவும் விருப்பம் !
ஆனால் வேலை தேடுவதே வேலையானால் ஏற்படுமோ திருப்பம் !
உழைப்பாளிக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற விருப்பம் ஆனால்
உழைப்பே அவனுக்கு ஊதியமானால் ஏற்படுமோ திருப்பம் !
நான் காதலித்த அவளை கை பிடிக்க விருப்பம் !
ஆனால் ஜாதி என்ற சாக்கடையால் ஏற்பட்டதோ திருப்பம் !
வரதட்சணை இல்லா திருமணத்தில்தான் விருப்பம் !
ஆனால் தட்சணை வேண்டாமென்றதால் ஏற்பட்டதோ திருப்பம் !
போதையால் பாதை மாறிப்போவோரை திசைதிருப்பவும் விருப்பம்!
ஆனால் போதையே அவனுக்கு பாதையானால் ஏற்படுமோ திருப்பம்!
ஊழலற்ற ஆட்சியில் தான் எனக்க்கு விருப்பம் !
ஆனால் ஊழலே ஆட்சி யானால் ஏற்படுமோ நல்ல திருப்பம் !
என் விருப்பங்கள் யாவும் நிரைவேறினால் நல்ல திருப்பங்களும் உருவாகுமே. . . . . . !
- ஐ.எஸ்.சுந்தரகண்ணன் (
கீற்றில் தேட...
விருப்பம்
- விவரங்கள்
- ஐ.எஸ்.சுந்தரகண்ணன்
- பிரிவு: கவிதைகள்