சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது
கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல் மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?என்றால்
பத்தோடு பதினொன்றாய்
வறுமையும் சொன்னது
"என்றும் நீ என்னோடுதானென்று"
- ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் (
கீற்றில் தேட...
என்றும் நீ என்னோடுதான்
- விவரங்கள்
- ஐ.எஸ்.சுந்தரகண்ணன்
- பிரிவு: கவிதைகள்