எங்கும் நிற்காமல்
வீட்டுக்கு வந்துவிடு
அம்மா சொன்னது
மனதில் ஒலித்தது
காத்திருந்தேன் பேருந்துக்காக
இருட்டியதும் வந்தது
பேருந்து இறுமாப்புடன்
இடம் கிடைக்குமா என்ற
ஏக்கத்துடன் படியில்
உந்தி ஏறியதும்
நிற்காமல் பறந்தனர்
நடத்துனரும் ஓட்டுனரும்
மதியம் உண்ட களைப்பில்
மயங்கிப்போய் நான்
இருக்கையில் இருக்க
இடமில்லாமல்
நின்று கொண்டே விழுந்தேன்
தூக்கம் சொக்கியதும்
இடம் வந்ததும்
இறங்கிக்கொண்டேன்
எதுவுமே தெரியாத இருட்டு
இருந்தாலும் கண்டேன்
தெரியாத தெருவும்
எரியாத விளக்கும்
அதற்குத்தான்
தெருவிளக்கென்று பேரோ?
கும்மிருட்டில் காத்திருந்த
சிற்றொளிக் கைவிளக்கு
தம்பி என்று தழுவிக்கொண்டது
என் தாய்.
- அத்திவெட்டி ஜோதிபாரதி(