பள்ளி செல்லும் வழியில்
பழுதடைந்து நின்றது பேருந்து
வயல்வெளிச் சாலையில்
இறங்கி நின்ற மழலைகள்
பள்ளியை மறந்து பரவசமாயினர்
குயில்களின் கூவலோடு சேர்ந்தது
குழந்தைகள் குரல்
குழந்தைப் பருவம் தொலைத்த
நடுத்தர வயது ஆசிரியை
எரிச்சலோடு சொன்னாள்
"டோண்ட் டாக்".

- ஜெ.நம்பிராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.