தலைக்கு மேல்
விடாமல்
கத்திக் கொண்டிருந்ததாம்
பல்லி.

இரவில் சில நாட்களாய்
கனவுகளின்
தொந்தரவாம்.

யாரோ இரவில்
உலுக்கி எழுப்பும்
உணர்வும் வந்ததாம்.

ஊரில்
தாத்தா காலமான
தகவல் அறிந்ததும்
அடுக்கத் துவங்கினர்
ஒவ்வொருவராய்.

அப்போதும்
சத்தம் போட்டது பல்லி. 

- சேவியர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.