கண்கள் மௌனம்
ஏதோ
ஒருவித சலனம்
நிகழ்காலங்கள்
நினைவில் இல்லை
புரிந்தபோதும்
வார்த்தையில் வறட்சி
உறங்கும் பாவனை
கனவு வேண்டல்
விடிந்ததும்
முதல் நினைவு
அதிக நேர அலங்கரிப்பு
இதயத் துடிப்பு கூட
அதன் பெயரில்
அழுவதற்கான வாய்ப்புகள்
காத்திருந்து பெறும்
மருத்துவமில்லாத வியாதி
கண்ணீர் வரைபடங்கள்
கண்ணங்களில்
காணாத பொழுதெல்லாம்
அது
வலியா ?
சுகமா ?
அவஸ்தையை பற்றிக்கொண்டு
தேம்ப தேம்ப விழிக்கும்
எதிர்படும்
நிஜங்கள் நிழலென...
ஓவியமாய்...
ஓவியம் அந்த ஒன்று மட்டும்
விழிவிழுந்து கடக்கும் வரை
தீவிரப்படும்
லப்டப இசையென...
இறக்கமின்றி கொலைபடும்
பூக்கள் காதலின் குறியீடுகள்
சம்மதம் பெற
எல்லாம் காதலாய்
அந்த
இதய சேர்க்கை நிகழும் வரை!
- அறிவுநிதி