Manநேற்றைப்போலில்லை!

கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு

வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்!

இரத்தம் வெளிறி
உறைந்துக் கிடக்கின்றன
இரவு பகல்கள்

பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை!

காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.

நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!


- இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.