கீற்றில் தேட...


என் வீட்டு ஜன்னலில்
வானத்தை காணவில்லை

எதிர்பட்டவை எல்லாம்
தூக்குமாட்டி தொங்கும்
வட்டுடைகளும்
வர்ணம் இழந்த ஜட்டிகளுமே...

வே(ர்)றெங்கோ..

இலை
உதிர்கிறது

காற்றிடம்
கொண்ட கலவியிலே
கசங்கிப் போயிருக்கவேண்டும்

அங்கும்
இங்கும் ஓடி..
மண்ணிலே மக்குகிறது
வளர்த்த மரம்விடுத்து

வே(ர்)றெங்கோ..

பாண்டித்துரை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.